வித்து பதருடன் சுதந்தரவாளியாயிருப்பதில்லை 65-02-18 1. ஜெபத்திற்காக நாம் சற்று நேரம் நிற்போம்: 2. அன்புள்ள தேவனே, மரித்துக் கொண்டிருக்கும் உலகிலுள்ள, மரித்துக் கொண்டு இருக்கும் சந்ததிக்கு, ஜீவனுள்ள கிறிஸ்துவைக் கொண்டு வருவதற்காக இன்றிரவு நாங்கள் இங்கு கூடி வந்திருப்பதை பெரிய சிலாக்கியமாகக் கருதுகின்றோம். 3. எங்கள் வார்த்தைகளையும் முயற்சிகளையும் நீர் அபிஷேகித்து, அவை வெறுமையாய் திரும்பாமல், அவைகளின் நோக்கத்தை நிறைவேற்ற வேண்டுமென வேண்டிக் கொள்கிறோம். 4. இன்றிரவு தேவையுடன் வந்திருக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும், ஸ்திரீக்கும், பையனுக்கும், பெண்ணுக்கும் ஒத்தாசை செய்யவேண்டுமென மன்றாடுகிறோம். பிதாவே, எங்கள் அனைவருக்கும் தேவையுண்டு என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம். எம்மாவூர் சீஷர்கள் உயிரோடெழுந்த கிறிஸ்து-வைக் கண்ட பிறகு, "வழியிலே அவர் நம்முடன் பேசிக்கொண்டு வந்த போது, நம்முடைய இருதயம் நமக்குள்ளே கொழுந்து விட்டு எரியவில்-லையா?” என்று கூறினார்களே! அது போன்ற உணர்வை நாங்கள், இன்றிரவு கூட்டம் முடிந்து செல்லும் போது, எங்கள் இருதயங்களில் பெற்றிருக்க கிருபையளியும். 5. வியாதியஸ்தர்களையும், அவதியுறுகிறவர்களையும் சுகப்படுத்தும். இன்றிரவு கூட்டத்திற்குப் பிறகு பலவீனமுள்ள ஒருவராவது இருக்க வேண்டாம், ஆண்டவரே. எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு அவிசுவாசியும் கூட இக்கூட்டத்திற்குப் பிறகு இருக்க வேண்டாம். இவர்கள் அனைவரும் நித்திய ஜீவனுக்கேற்ற விசுவாசத்தைப் பெற்றுக் கொள்வார்களாக-! இங்கு கூடி வந்திருக்கும் நோக்கமே அது தான். 6. இந்த ஆசீர்வாதங்களை தேவனுடைய ராஜ்யத்தின் மகிமைக்காக, தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கேட்கிறோம், ஆமென். 7. இன்றிரவு மீண்டும் இங்கு கூடிவந்துள்ளது நல்லது. ஒரு சிலர் சுவர்களைச் சுற்றிலும் நின்றுக் கொண்டிருப்பதைக் காண்கிறேன். நாட்டின் பல பாகங்களுக்கு சான்ஜோஸ், டூசான், (San-Francisco, Tucson) கிழக்கிலுள்ள பட்டிணங்கள் போன்ற இடங்களுக்கு, இச்செய்தி தொலைபேசியின் மூலம் சென்று கொண்டிருக்கின்றது என்று நினைக்கிறேன். தொலைபேசியின் மூலம் கேட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு என் வாழ்த்துதலைத் தெரிவிக்கிறேன். இன்றிரவு நாம் ஜூனியர் உயர்நிலைப்பள்ளி அரங்கத்தில் கூடியிருக்கிறோம். அரங்கம் நிறைந்து, ஜனங்கள் மேடைக்குச் செல்லும் வழியிலும் (aisle) சுவர்களைச் சுற்றிலும் நின்று கொண்டிருக்கின்றனர். நாளை இரவு அவர்கள் உடற்பயிற்சி நிலையத்திற்குச் செல்லும் வழியைத் திறந்து கொடுக்கப் போவதாக கேள்விப்படுகிறேன். அப்பொழுது அரங்கம் விரிவடைந்து, இன்னும் அனேகம் பேரைக் கொள்ளும். 8. நாம் பெரிய காரியங்களை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம். முதலாவதாக இயேசு-கிறிஸ்துவின் வருகையையும், அடுத்ததாக இழந்து போன ஆத்துமா-க்கள் இன்றிரவு அவரை ஏற்றுக் கொண்டு, இரட்சிக்கப்பட்டு, அவருடைய வருகைக்கு ஆயத்தப்பட வேண்டும் என்பதையும் நாம் எதிர்நோக்கி இருக்கிறோம். 9. மேடையின் மீது அமர்ந்திருக்கும் இச்சிறந்த மனிதர்களுக்கு விசேஷ வாழ்த்துதலையளித்து அவர்களை வரவேற்க விரும்புகிறேன். அவர்களில் அனேகர் போதகர்கள் என்று கேள்விப்படுகிறேன். 200-க்கும் அதிகமானவர்கள் மேடையில் அமர்ந்துள்ளனர். அவர்கள் இங்கு வந்துள்ளமைக்காக நன்றி உள்ளவனாயிருக்கிறேன். 10. நாட்டின் பல்வேறு பாகங்களிலிருந்தும், கடல் கடந்தும் இங்கு வந்து உள்ளவர்கள் எங்களுடன் ஐக்கியங்கொள்ள விருப்பம் கொண்டுள்ளதைக் குறித்து நான் நன்றி சொல்லுகிறேன். ஒரு மகத்தான கூட்டத்தை தேவன் அருளுவார் என்று நாம் எதிர்நோக்கி இருக்கிறோம். 11. இந்த சில நாள் கூட்டங்களுக்காக நான் இங்கு வரவேண்டும் என்று தீர்மானித்த முதற்கு, ஏதோ ஒன்று நிகழவிருக்கின்றது என்னும் வினோதமான திகில் என் இருதயத்தில் குடி கொண்டுள்ளது. அது என்னவென்று எனக்குத் தெரியாது. பாவமும் அவிசுவாசமும் நிறைந்துள்ள இருள் சூழ்ந்த உலகில் நாம் வாழும் இந்நேரத்தில், அவருடைய இராஜ்யத்தின் மேலான குடி மக்கள் ஆவதற்காய் நம்மை ஆயத்தப்படுத்தும் ஒரு மகத்தான வெளிப் பாட்டை நாம் தேவனிடமிருந்து பெறவிருக்கிறோம் என்பதை நான் நிச்சயம் நம்புகிறேன். 12. இன்றிரவு நாம் கூடியுள்ள இந்த ஸ்தலம் எனக்கு முக்கியம் வாய்ந்தது. ஒரு அரங்கத்தை இங்கு கட்டப் போகிறார்கள் என்று கேள்விப்பட்ட முதற்கே, இங்கு ஒரு ஆராதனையை நடத்த வேண்டுமென்ற விருப்பம் எழுந்தது. பள்ளியின் நிர்வாகக் குழுவுக்கும், இங்கு நம்மை அனுமதித்த மற்றவர்க்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த கட்டிடம் நிற்கும் ஸ்தலத்தில் 30-ஆண்டுகட்கு முன்னர் ஓர் மகத்தான சம்பவம் நிகழ்ந்தது. அச்சமயம் இது துடைப்பம்புற்கள் வளர்ந்திருந்த ஒரு புதர் வயலாக இருந்தது. நான் 200 கெஜம் தூரத்தில் ஒரு சிறு வீட்டில் வசித்து வந்தேன். என் பெற்றோரின் இரட்சிப்புக்காக நான் அப்பொழுது மிகவும் கவலை கொண்டு இருந்தேன். அவர்கள் இருவரும் இப்பொழுது பரம வீட்டில் இருக்கின்றனர். அந்நாட்களில் என் தகப்பனாரைக் குறித்து பிரத்தியேகமாக கவலை கொண்டு இருந்தேன். அது கோடை காலமாயிருந்ததால், நான் முற்றத்தில் உறங்கிக் கொண்டிருந்தேன். (பத்தி 13 தமிழ் மொழி-பெயர்ப்பில் இல்லை ) 14. திடீரென்று நான் உறக்கத்தினின்று எழுந்தேன். என் தகப்பனைக் குறித்த பாரம் என் இருதயத்தில் எழுந்தது. இரவு ஆடையின் மேலேயே நான் கால் சட்டையைப் போட்டுக் கொண்டு, இக்கட்டிடம் நிற்கும் புதர் வயலுக்கு வந்து சேர்ந்தேன். 15. என் தகப்பனுக்காக அங்கு நான் முழங்காற்படியிட்டு, அவர் இரட்சிக்கப்பட வேண்டுமென்றும், அவரை நான் நேசிக்கிற காரணத்தால், அவரைப் பாவியாக மரிக்க விடக்கூடாது என்றும் தேவனிடம் மன்றாடினேன். ஜெபம் செய்தவாறு நான் எழுந்து கிழக்கை நோக்கினேன். அப்பொழுது ஒரு தரிசனம் உண்டானது. 16. மாயையான தோற்றத்தை (hallucination) நான் நம்புவதில்லை. ஆனால் தரிசனம் என்பது உண்மையானது. அங்கு கர்த்தராகிய இயேசு-கிறிஸ்து நின்று கொண்டிருந்தார். தரிசனங்களில் அவரைக் காண்பது அதுவே முதல் முறையாகும். என் தலைக்கு மேல் பத்து அடி உயரத்தில் அவர் நின்று கொண்டிருந்தார். அவர் வெள்ளை அங்கி அணிந்திருந்தார். அதன் ஓரங்களில் சுருக்கம் (fringe) வைக்கப்பட்டிருந்தது. அவர் தலைமயிர் தோள் வரை வளர்ந்து இருந்தது. வேதம் அவரை விவரிப்பது போன்றே அவர் காணப்பட்டார். 30-வயது தோற்றமுடையவராய், சிறிய உருவம் படைத்தவராய், மெலிந்து காணப்பட்டார். அவருடைய எடை 130-பவுண்டுக்கு அதிகமாய் இருக்க முடியாது. 17. அவரை நான் கண்ட போது, ஏதோ ஒன்றை காண்கிறேன் என்பதை மாத்திரம் அறிந்து கொண்டேன். அது ஒருக்கால் தவறாயிருக்குமோ என்று எண்ணினவனாய், கண்களை பிசைந்து மறுபடியும் பார்த்தேன். அவர் சற்று பக்கவாட்டில் நின்று கொண்டிருந்தார். அவர் முகத்தின் சாயல் (profile) மாத்திரமே தென்பட்டது. அவர் முகத்தோற்றம் - நான் அடிக்கடி அதை தரிசனங்களில் கண்டிருக்கிறேன் - ஹாஃப்மான் என்பவர் வரைந்துள்ள "33-வயதில் கிறிஸ்துவின் முகச்சாயல்” என்னும் படத்தில் இருப்பது போன்றே காணப்பட்டது. எனவே தான் நான் அந்த படத்தை என் வீட்டில் தொங்க விட்டிருக்கிறேன். நான் படிக்கும் புத்தங்களிலும், கூடுமான இடங்களில் எல்லாம் அதை வைத்திருக்கிறேன். ஏனெனில் அது போன்று தான் அவர் காணப்பட்டார். அவர் சிறிய உருவம் படைத்தவராய் எனக்குத் தோன்றினது. 18. அவரை நான் கண்டபோது, என் கண்களை என்னால் நம்பமுடியவில்லை. "என் ஆண்டவர் நின்று கொண்டிருப்பதை உண்மையாகவே நான் காண்கிறேனா?” என்று வியந்தேன். பீடம் தற்பொழுது இருக்கும் இடத்தில் இருந்து சுமார் நாற்பது அல்லது ஐம்பது கெஜம் துரத்தில் (radius) நான் நின்று கொண்டிருந்தேன். 19. நான் நிமிர்ந்து பார்த்த போது, அவர் அங்கு நின்று கொண்டிருப்பதைக் கண்டேன். நான் விழித்துக் கொண்டிருக்கின்றேனா என்பதை உறுதிப்படுத்த என் விரலைக் கடித்துப் பார்த்துக் கொண்டேன். என்னால் அதை நம்பவே முடியவில்லை. நான் கர்த்தருக்குள் வந்து அப்பொழுது சிறிது காலம் தான் ஆகியிருந்தது. நான் பிரசங்கம் செய்யத் தொடங்கி, அப்பொழுது ஆறு மாதங்களே கழிந்திருந்தன. நான் துடைப்பம் புல் ஒன்றைப் பறித்து, அதில் ஒரு சிறு துண்டை உடைத்தேன். நாட்டுப் புறங்களில் உள்ளவர், துடைப்பப் புல்லில் பல்குத்தி இருக்கின்றது என்பதை அறிவார்கள். அதை வாயில் போட்டு மெல்லத் தொடங்கினேன். "இது உண்மையாக இருக்க முடியாது. நான் சொப்பனம் காண்கிறேன் என்று நினைக்கிறேன்” என்று எண்ணினேன். 20. நான் தரையை உதைத்து, தலையை அசைத்து, கையைப் பிழிந்து கொண்டு, மறுபடியும் நிமிர்ந்து பார்த்தேன். அவர் உண்மையாகவே அங்கு நின்று கொண்டிருந்தார். அப்பொழுது காற்று வீசத் தொடங்கினது. துடைப்பம் புற்களும் காற்றில் அசையத் தொடங்கின. வரிசையாக உலர வைத்த துணிகள் காற்றில் எவ்விதம் அசையுமோ, அது போன்று அவருடைய அங்கியும் காற்றில் அசைந்தது. 21. "அவருடைய முகத்தை நன்றாகக் கண்டால் எவ்வளவு நலமாயிருக்கும்!'' என்று எண்ணினேன். அவரோ கிழக்கை நோக்கியவராய், எதையோ கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார். அவருடைய முகத்தை அருகில் காணவேண்டும் என்று அவரை அணுகினேன். ஆனால், அவரை சரிவர காண இயலவில்லை . அவருடைய கைகளை அவர் முன்னால் வைத்துக் கொண்டிருந்தார். நான் நின்று கொண்டிருந்த இடத்திலிருந்து அவரைக் காணக் கூடாதவாறு அவர் மறைக்கப்பட்டிருந்தார். 22. அவ்விடத்திலிருந்து நான் சற்று நகர்ந்து, அவருடைய கவனத்தைக் கவர எண்ணி, கனைத்துப் பார்த்தேன். அவரோ அசையவில்லை . 23. அவரை அழைத்துப் பார்க்கலாமே என்று கருதி, "இயேசுவே” என்றேன். அவர் தலையைத் திருப்பி கரங்களை விரித்தவராய், என்னைத் திரும்பிப் பார்த்தார். அவ்வளவு தான் எனக்குத் தெரியும். விடியற்காலை வரை என்ன நேர்ந்ததென்று எனக்கு ஞாபகமில்லை. வயலில் ஏறக்குறைய இந்த இடத்தில் தான் நான் படுத்துக் கொண்டிருந்தேன். நான் இரவு முழுவதும் கண்ணீர் சிந்தினதால், என் இரவு ஆடை நனைந்து காணப்பட்டது. நான் எழுந்து சென்று விட்டேன். அவருடைய முகத்தோற்றத்தின் தன்மையை ஒரு ஓவியனும் தத்ரூபமாக சித்தரிக்கவே முடியாது. காண்பதற்கு அவர் சாதாரண மனிதனைப் போலவே இருந்தார். அவரைக் காணும்போது, அனுதாபத்தோடும், மரியாதையோடும், பயபக்தியோடும் அழவேண்டுமென்று தோன்றும். ஆனால் அவர் பேசத் தொடங்கினால், முழு உலகத்தையும் அசைக்கும் அளவிற்கு அதில் போதிய வல்லமையுண்டு, அத்தகைய தன்மையை எந்த ஒரு ஓவியனும் தத்ரூபமாக வரையவே முடியாது. 24. எதற்காக அந்த காட்சியைக் கண்டேன் என்று இன்று வரை எனக்குப் புலனாகவில்லை. ஆனால் 30-ஆண்டுகள் கழிந்த பின்பு, சர்வவல்லமையுள்ள தேவனை ஆராதிப்பதற்கென, அதே இடத்தில் கட்டப்பட்டு, அவருக்காக பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் அரங்கத்தில் இன்று நான் நின்று கொண்டு இருக்கிறேன். அவரை நான் கண்ட சமயத்தில், நான் பாப்டிஸ்டு சபையின் ஒரு மூப்பனாக இருந்தேன். ஆனால் இன்று அதே இடத்தில், இந்த அரங்கம் நிரம்பி வழியும் கூட்டத்திற்கு முன்னால் நின்று கொண்டிருக்கிறேன். இயேசு கிறிஸ்துவின் இரத்தம் கிரயமாக செலுத்தப்பட்டதன் விளைவாக பெற்றுக் கொண்ட இரட்சிப்புடன், இன்றிரவு உங்கள் முன்னிலையில் நான் நிற்கிறேன். இந்த நான்கு நாட்களிலும், கர்த்தருடைய செய்தியைக் கொண்டு வருவது எனக்களிக்கப்பட்ட பொறுப்பாயுள்ளது. 25. அந்த அனுபவத்திற்குப் பின்பு ஆறு மாதங்கள் கழித்து, ஸ்பிரிங் வீதியின் எல்லையில் உள்ள ஆற்றில், எனது முதல் ஞானஸ்நான ஆராதனையை நடத்தினேன். அப்பொழுது தான் அந்த ஒளி வானத்தில் தோன்றினது, முதன் முறையாக கர்த்தருடைய தூதன் ஜனங்களுக்கு அவ்விடத்தில் பிரத்தியட்சமானார். அப்பொழுது பகல் 2-மணி இருக்கும். அந்த ஒளியிலிருந்து ஒரு சத்தம் உண்டாகி, "இயேசு கிறிஸ்துவின் முதலாம் வருகைக்கு முன்னோடியாக யோவான்ஸ்நானகன் அனுப்பப்பட்டது போன்று உன் செய்தி அவருடைய இரண்டாம் வருகைக்கு முன்னோடியாக இருக்கும்” என்றுரைத்தது. 26. 30-ஆண்டுகள் முன்பு இது நிகழ்ந்தது. செய்தியானது, உலகம் சுற்றிலும் சென்று விட்டது. எனினும் இன்றிரவு நான் இன்னமும் அதே செய்தியை பிரசங்கித்துக் கொண்டிருக்கிறேன். என் முழு இருதயத்தோடும் நான் அன்பு கூறும் கர்த்தராகிய இயேசுவை அறிவிக்க என் சொந்த இருப்பிடத்திற்கு மறுபடியும் வந்துள்ளதற்காக மகிழ்ச்சியுறுகிறேன். "ஒவ்வொரு நாளும் அவர் முந்தைய நாளைக் காட்டிலும் எனக்கு இனியவராக வளர்ந்து வருகிறார்.” என் உபதேசத்தை நான் சிறிது கூட மாற்றிக் கொள்ளவில்லை. ஆரம்பத்தில் நான் அன்று என்ன பிரசங்கம் செய்தேனோ, அதையே நான் இன்றும் விசுவாசிக்-கிறேன். அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். என்னிடம் ஒரு செய்தியுண்டு, அதற்கு நான் பொறுப்பாளி. 27. இச்செய்தி வியாதியஸ்தர்க்கு ஜெபம் செய்வதில் தொடங்கினது. அப்பொழுது மகத்தான அடையாளங்களும், அற்புதங்களும் ஜனங்களின் மத்தியில்; விசேஷமாக பெந்தெகொஸ்தே மக்களின் மத்தியில்; காணப்-பட்டன. சுகமளிக்கும் எழுப்புதல் உலகம் பூராவும் பரம்பினது. 15-ஆண்டு காலமாக இந்த எழுப்புதல் அக்கினி எரிந்து கொண்டிருந்தது. அந்த ஒரு சம்பவம் அனேக சுவிசேஷகர்களைத் தூண்டியது. அதன் விளைவாக இலட்சக்கணக்கானவர் இயேசு கிறிஸ்துவை தங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டனர். 28. அச்சமயம் பெந்தெகொஸ்தே சபை மரித்துப் போன நிலையில் வீழ்ச்சி அடைந்திருந்தது. கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வருகை அருகாமையில் இருப்பதால் அந்த சபையைத் தட்டி எழுப்புவதே இன்றிரவு என் நோக்கமும் ஆவலுமாயுள்ளது. அதை நான் கடிந்து கொள்ள வேண்டியதாயிருக்கிறது. பாவம் காணப்படும் இடத்திலெல்லாம், அதை நான் கடிந்து கொள்ள வேண்டும். நான் கொண்டிருக்கும் செய்தி ஸ்தாபனங்களுக்கல்ல. 29. சபையின் உத்தரவு பெறுவதென்பது இக்காலத்தில் கடினமான செயலாகும். இயேசு கிறிஸ்துவுக்கும் அதே அனுபவம் உண்டாயிருந்தது. அது நானல்ல, அவராயிருப்பதால் தற்பொழுதும் அதே விதமாக உள்ளது. அவர் பிணியாளி-களைச் சுகப்படுத்தி, மரித்தோரை உயிரோடெழுப்பி, குஷ்டரோகிகளைச் சுத்தமாக்கி, பிசாசுகளைத் துரத்தின போது, எல்லோரும் அவரை விரும்பி வரவேற்றனர். ஒவ்வொரு அடையாளத்தைத் தொடர்ந்து ஒரு செய்தி தோன்ற வேண்டும். அந்த செய்தி புறப்பட்டுச் செல்லும் காலம் ஒன்று வரும். ஏனெனில் அந்த அடையாளத்திற்கு ஒரு சப்தம் உண்டு. 30. ஒரு நாள் இயேசு, "நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்” (யோவான் 10:30) என்றார். அதை யூதர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவர், ''நீங்கள் மனுஷகுமாரனுடைய மாம்சத்தைப் புசியாமலும், அவருடைய இரத்தத்தைப் பானம் பண்ணாமலும் இருந்தால் உங்களுக்குள்ளே ஜீவன் இல்லை” (யோவான்.6:53) என்று உரைத்தபோதும், அதே விதமாகவே இருந்தது. 31. வைத்தியர்களும், கல்விமான்களும், "இந்த மனிதன் மற்றவரின் இரத்தத்தைக் குடிக்கும் பூதம் (Vampire). ஆகவே தான் அவனுடைய மாமிசத்தை நாம் புசிக்கவும், அவனுடைய இரத்தத்தை நாம் பானம் பண்ணவும் வேண்டும் என்கிறான்” என்று கூறியிருப்பார்கள். அவர்கள் என்ன தான் நினைத்தாலும், அவர் அதை விவரிக்கவில்லை. அதை கூறி அப்படியே விட்டுவிட்டார். 32. இன்றிரவிலும், தொடர்ந்து நடக்கவிருக்கும் கூட்டங்களிலும், எங்களால் விவரிக்க இயலாத சில காரியங்களை நீங்கள் கேட்க வகையுண்டு. இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்பது நினைவிருக்கட்டும், அதை நாங்கள் விசுவாசிக்கிறோம். 33. நாம் பேசுவதற்கு அதிக நேரம் கிடையாது. குறிப்பிட்ட நேரத்தில் நாம் இந்த இடத்தை காலி செய்ய வேண்டும். அந்த நேரத்தை நிர்ணயித்துள்ள பள்ளி நிர்வாகக் குழுவின் ஆணையை நாம் கெளரவிக்க வேண்டும். அதற்காக நம்மால் இயன்ற அனைத்தையும் நாம் செய்ய வேண்டும். 34. கிறிஸ்துவினிடம் வர வேண்டுமென்று விரும்பும் பாவி யாராகிலும் இருந்தால், நான் பிரசங்கம் செய்து கொண்டிருந்தாலும், பாடிக் கொண்டு இருந்தாலும், நீங்கள் எழுந்து நடந்து இங்கு முன்னால் வரலாம். நீங்கள் அமர்ந்திருக்கும் ஆசனத்திலிருந்தே உங்கள் ஜீவியத்தை நீங்கள் கிறிஸ்து-வுக்குச் சமர்ப்பிக்கலாம். உங்களுக்கு உதவி செய்யவே நாங்கள் இங்கு இருக்கிறோம். 35 நான் சகோதரர் வெய்ல், சகோதரர் ராபர்- ...பாடர்ஸ் மற்றும் இங்குள்ள சகோதரர்களிடம் பேச விரும்புகிறேன். பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தை நாடுவோருக்கு தேவாலயத்தில், மதியம், அல்லது சில காலை, அல்லது ஏதாவது ஒரு போதனை சேவையை அவர்களால் செய்ய முடியவில்லை என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அது சரியாகுமா, சகோதரர்களே? சகோதரர் நெவில் மற்றும் நீங்கள் அனைவரும் அங்கு வரலாம், சகோதரர் கேப்ஸ். பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தில் யாராவது அறிவுறுத்தப்பட விரும்பினால், நீங்கள் ஏன் கூடாரத்திற்கு வரக்கூடாது… காலையிலா அல்லது பிற்பகலிலா.... எது சிறந்தது-? 36 (யாரோ, “காலை” என்கிறார்...) காலை, சுமார் பத்து மணிக்கா-? காலை சுமார் பத்து மணி. 37 கோட்பாட்டைப்பற்றிய கேள்வி உங்களுக்கு இருந்தால், செய்தியைப்பற்றிய கேள்வி உங்களுக்கு இருந்தால், நீங்கள் - நீங்கள் இருக்க விரும்பினால்... நீங்கள் ஒரு போதும் தனிப்பட்ட முறையில், நீங்கள் ஜெபிக்கப்பட வேண்டும் அல்லது நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பும் எதையும்.... ஊழியம் செய்யவில்லை. அவர்களின் பழக்க வழக்கங்களில், நீங்கள் ஏன் காலை பத்து மணிக்கு அங்கே வந்து இம்மனிதர்களைப் பார்க்கக் கூடாது. அறிவுறுத்து-வதற்கும், நோய்வாய்ப்பட்டவர்களுக்காக ஜெபிப்பதற்கும், கேள்விகளுக்குப் பதிலளிக்கவும் அவர்களில் ஒருவர் அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் இருப்பார்கள். ஒரு தனி மனிதனாக, சரி, அவர்… நீங்கள் அவர்களிடம் செல்லுங்கள், அவர்கள் தங்களால் இயன்ற விதத்தில் உங்களுக்கு உதவுவதில் மகிழ்ச்சி அடைவார்கள். 38. நாம் வார்த்தையை அணுகும் முன்பு, அந்த வார்த்தையின் ஆக்கியோனை (Author) நாங்கள் அணுக விரும்புகிறோம். நாம் அதிகம் உண்கிறோம், அதிகம் குடிக்கிறோம், அதிகம் சிரிக்கிறோம், அதிகம் நடக்கிறோம். ஆனால் நாம் அதிகம் ஜெபம் செய்வது கிடையாது. "அன்றியும், புருஷர்கள் கோபமும் தர்க்கமுமில்லாமல், பரிசுத்தமான கைகளை உயர்த்தி, எல்லா இடங்களி-லேயும் ஜெபம் பண்ண வேண்டுமென்று விரும்புகிறேன்” (1-தீமோ-2:8). ஜெபம் செய்வோம்: 39. அருமை இயேசுவே, ஜீவனுள்ள வார்த்தைக்குத் தொடக்கமாயிருப்பவரே (author), நீரே அந்த வார்த்தை. அந்த தரிசனத்தை விவரித்த பின்பு நாங்கள் உம்மை பயபக்தியுடன் அணுகுகின்றோம். நான் கூறினது உண்மையென்று நீரே சாட்சி பகருகிறவராயிருக்கின்றீர். தேவனுடைய சத்தத்திற்கு செவி சாய்க்கும் ஒவ்வொருவரும் கேட்பதற்காக, உமது வார்த்தைகளை அபிஷேகம் செய்ய வேண்டுமென்று மன்றாடுகிறேன். ஆயத்தமாயிராத யாராகிலும், அல்லது இக்காலத்து சவாலையும், மனந்திரும்பி ஆயத்தப்பட வேண்டுமெனும் தேவனுடைய செய்தியையும் ஏற்றுக் கொள்ளாத யாராகிலும் இந்த இடத்தில் ஆவது அல்லது நாட்டில் வேறெங்காவது, இச்செய்தியைக் கேட்டுக் கொண்டிருப்பவர்கள் இருந்தால், அவர்கள் இன்றிரவு ஆயத்தப்பட வேண்டும் என்று ஜெபிக்கிறேன். ஏனெனில் தேவனுடைய இராஜ்யம் அருகாமையில் உள்ளது. 40. நான் இங்கும் மற்றவிடங்களிலும் கூறுபவைகளுக்கு நியாயத்தீர்ப்பின் நாளிலே உத்திரவாதமுள்ளவன் என்பதை அறிந்தவனாய், உமது ஒத்தாசையை நாடுகின்றேன். நான் கூறுவதையும் செய்வதையும் அதிக பொறுப்புடன் செய்ய உதவி செய்யும், ஏனெனில், “இந்த நியாயப்பிரமாண புஸ்தகம் உன் வாயை பிரியாதிருப்பதாக; இதில் எழுதியிருக்கிறவைகளின்படி எல்லாம் நீ செய்யக் கவனமாயிருக்கும்படி இரவும் பகலும் அதைக் தியானித்துக் கொண்டிருப்பாயாக; அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப்பண்ணுவாய். அப்பொழுது புத்திமானாயும் நடந்து கொள்வாய், நான் உனக்குக் கட்டளையிடவில்லையா? பலன் கொண்டு திடமானதாயிரு; திகையாதே, கலங்காதே, நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடு இருக்கிறார்” என்பதே உமது கட்டளையாயுள்ளது. கர்த்தராகிய இயேசுவே, இன்றிரவு அதை நிறைவேற்ற வேண்டுமென்று மன்றாடுகிறேன். இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் விண்ணப்பங்களை ஏறெடுக்கிறோம், ஆமென். 41. வெள்ளிக்கிழமையும், சனிக்கிழமையும் பத்து முதல் பன்னிரண்டு மணி வரை, "எய்த் அண்டு பென் தெருக்கள்” (Eighth and Penn Streets) என்னும் ஸ்தலத்திலுள்ள கூடாரத்தில் போதனைகளும், உபதேசங்களின் பேரிலுள்ள கேள்விகளுக்கு பதிலும், வியாதியஸ்தருக்காக ஜெபங்களும் ஏறெடுக்கப்படும். உங்களிடம் கேள்விகள் இருக்குமானால், அல்லது உங்களுக்குத் தேவைகள் ஏதாகிலும் இருக்குமானால், அங்கு வரவும். அவைகளைக் கையாள அங்கு சகோதரர்கள் இருப்பார்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக! 42. இந்த தொடக்க ஆராதனையில் உங்களை நேரடியாக செய்திக்குக் கொண்டு செல்வதைத் தவிர வேறொன்றும் செய்ய முடியாது. அதற்காகவே நாம் இங்கு கூடிவந்துள்ளோம். அதற்காகவே நாம் இங்கு மறுபடியும் வந்து இருக்கிறேன். கர்த்தருக்குச் சித்தமானால் ஞாயிறு காலை இந்நாளின் பெரிய சவாலை சந்திக்க - 'விவாகமும் விவாகரத்தும்' என்னும் பொருளின் பேரில் பிரசங்கிக்க விரும்புகிறேன். 43. கலாத்தியர் 4 : 27 - 31 வசனங்களைப் படிக்கிறேன். "அந்தப்படி பிள்ளை பெறாத மலடியே, மகிழ்ந்திரு; கர்ப்ப வேதனைப்-படாதவளே, களிப்பாய் எழும்பி ஆர்ப்பரி; புருஷனுள்ளவளைப் பார்க்கிலும் அநாத ஸ்திரீக்கே அதிக பிள்ளைகளுண்டு என்று எழுதி இருக்கிறது. சகோதரரே, நாம் ஈசாக்கைப்போல் வாக்குத்தத்தத்துப் பிள்ளைகளாய் இருக்கிறோம். ஆகிலும் மாம்சத்தின்படி பிறந்தவன் ஆவியின்படி பிறந்தவனை அப்பொழுது துன்பப்படுத்தினது போல, இப்பொழுதும் நடந்து வருகிறது. அதைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது: அடிமையானவளின் மகன் சுயாதீனம் உள்ளவளுடைய குமாரனோடே சுதந்தரவாளியாயிருப்பதில்லை; ஆகையால் அடிமை-யானவளையும், அவளுடைய மகனையும் புறம்பே தள்ளு என்று சொல்கிறது. இப்படியிருக்க, சகோதரரே, நாம் அடிமையானவளுக்குப் பிள்ளைக-ளாயிராமல், சுயாதீனமுள்ளவளுக்கே பிள்ளைகளாயிருக்கிறோம்”. கலா.4:27-31 44. கர்த்தர் தாமே வாசித்த இவ்வசனங்களுடன் தமது ஆசீர்வாதத்தைக் கூட்டுவாராக! வழக்கமில்லாத, வினோதமான ஒரு பொருளை இன்று நான் தெரிந்து கொள்ள விருக்கிறேன். சில சமயங்களில் தேவனை இத்தகைய அசாதாரண வழிகளிலும், காரியங்களிலும் நாம் கண்டு கொள்ளலாம், தேவன் அசாதாரணமானவர் (unusual). அவரை இருதயப்பூர்வமாக சேவிப்பவர்கள், உலக வழக்கத்திற்கு மாறாக உள்ள வழியில் அவரைத் தேடிக் கண்டு பிடிக்க வேண்டும். என்னுடைய பொருள், "வித்து பதருடன் சுதந்தரவாளியாய் இருப்பதில்லை ” என்பதாம். 45. ஆபிரகாமின் மாமிசப்பிரகாரமான இரு குமாரர்களைக் குறித்து பவுல் இங்கு பேசுகின்றான். அவன் சுயாதீனமுள்ளவளின் பிள்ளையென்று தன்னை மகிழ்ச்சியுடன் அழைத்துக் கொள்கிறான். 46. ஆபிரகாமுக்கு வெவ்வேறு ஸ்திரீகளின் மூலம் இரண்டு குழந்தைகள் பிறந்தன என்பதை நாமறிவோம். சாராளின் மூலம் அவனுக்குக் குமாரன் பிறப்பானென்றும், அவன் மூலம் உலகம் முழுவதுமே ஆசீர்வதிக்கப் படுமென்றும் தேவன் வாக்களித்திருந்தார். எல்லா தேசங்களும் இக்குமாரன் மூலம் ஆசீர்வதிக்கப்படும். இந்த குமாரன் ஈசாக்கு என்று வழக்கமாக நம்பப்பட்டது - முக்கியமாக யூதர்கள் அவ்வாறு நம்பியிருந்தனர். ஆனால் அது உண்மையல்ல. இயேசு தான் ஆபிரகாமுக்கு வாக்களிக்கப்பட்ட குமாரனாவார். அவரே ஆபிரகாமின் ராஜரீக சந்ததி. ஆபிரகாமுக்கு இரு குமாரர் இருந்தனர். 47. ஒருவன் அவனுடைய மனைவியின் அடிமைப் பெண்ணாயிருந்த ஆகாரின் மூலம் பிறந்தவன். ஆபிரகாம் எகிப்தில் கண்டெடுத்த அழகிய பெண் தான் ஆகார் என்பவள். கர்த்தர் தாம் செய்த எல்லா வாக்குத்தத்தங்களையும் நிறைவேற்ற முடியாது என்று சாராள் எண்ணினாள். எனவே ஆகாரை மணந்து அவள் மூலம் ஒரு குமாரனைப் பெற அவள் ஆபிரகாமிடம் கூறினாள் (அந்நாட்களில் பல பெண்களை மணந்து கொள்வது சட்டப் பூர்வமானது). கர்த்தர் அவ்விதமாகவே திட்டமிட்டிருந்ததாக சாராள் கருதினாள். ஆனால் அது அப்படியல்ல என்பதை நாமறிவோம். 48. தேவன் மூன்றில் பரிபூரணப்படுகிறார் என்பது நமக்கு தெரியும். "ஐந்து” என்னும் எண் கிருபையையும், "ஏழு” என்பது பூரணத்தையும் குறிக்கின்றது. தேவன், பிதா, குமாரன், பரிசுத்த ஆவியில் பரிபூரணப்படுகிறார். அதுவே தேவத்துவத்தின் பரிபூரணமாயிருக்கிறது. ஒரே தேவனின் மூன்று தோற்றங்கள் அல்லது தன்மைகள். ஒரே தேவன் மூன்று உத்தியோகங்களைக் கொண்டவராயிருக்கிறார். 49. அவ்வாறே சபையின் பரிபூரணத்திற்கு மூன்று படிகள் உண்டு. நீதிமானாக்கப்படுதல் (justification), பரிசுத்தமாக்கப்படுதல் (sanctification), பரிசுத்த ஆவியின் அபிஷேகம் என்பவை. இது இயற்கை பிரசவம் போன்றது. ஒரு பெண் ஒரு குழந்தையைப் பிரசவிக்கும்போது, முதலில் வருவது தண்ணீர், பின்பு இரத்தம், கடைசியில் ஜீவன். 1-யோவான்-5:7-8 வசனங்களில் வேதம் கூறுகின்றது: "[பரலோகத்திலே சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை (அதாவது குமாரன்), பரிசுத்த ஆவி என்பவர்களே, இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள் (these three are one). பூலோகத்திலே) சாட்சியிடுகிறவைகள் மூன்று, ஆவி, ஜலம், இரத்தம் என்பவைகளே. இம்மூன்றும் ஒருமைப்பட்டிருக்கிறது.” 50. பிதா, குமாரன், பரிசுத்த ஆவி ஒன்றே. பிதாவில்லாமல் குமாரன் உங்களுக்கு இருக்கமுடியாது. அவ்வாறே குமாரனில்லாமல் பரிசுத்த ஆவி உங்களுக்கு இருக்க முடியாது. ஆனால், நீங்கள் பரிசுத்தமாக்கப்படாமல் நீதிமானாக்கப்படலாம். அவ்வாறே பரிசுத்தாவியின் நிறைவைப் பெறாமலேயே நீங்கள் பரிசுத்தமாக்கப்படலாம், இயற்கையைக் கொண்டு நாங்கள் அதை நிரூபிக்க முடியும். 51. உங்களில் அநேகருக்கு நான் அந்நியனாயிருக்கலாம். நான் படிக்கவில்லை. உதாரணங்கள் மூலமாகவே நான் கற்பிப்பவன். இயற்கை சம்பவங்கள் ஆவிக்குரிய காரியங்களுக்கு எடுத்துக்காட்டாய் அமைந்துள்ளன. 52. ஆபிரகாமின் சந்ததி மூன்றில் பரிபூரணப்பட்டது. இஸ்மவேல், ஈசாக்கு, இயேசு. அது போன்று தேவனும் மூன்றில் பரிபூரணப்படுகின்றார். இஸ்மவேல் அடிமையானவளின் மூலம் தோன்றினவன். ஈசாக்கு சுயாதீனம் உள்ளவளுக்குப் பிறந்தவன். இருவரும் இன சேர்க்கையின் மூலம் பிறந்தவர்கள். ஆனால் இயேசுவோ ஒரு கன்னிகையின் மூலம் பிறந்தார். அவருடைய பிறப்புடன் இனச்சேர்க்கை சம்பந்தப்படவில்லை . 53. கவனியுங்கள், சந்ததி என்று ஒருமையில் கூறப்பட்டுள்ளது. சந்ததிகள் அல்ல, ஒரே சந்ததி. இஸ்மவேலும் ஈசாக்கும் ஆபிரகாமின் சந்ததிகளாகக் கருதப்படவில்லை. ஆபிரகாமின் சந்ததி எனப்படுவது அவனுடைய விசுவாச சந்ததியையே குறிக்கின்றது. கர்த்தர் மாமிசப்பிரகாரமான சந்ததியைக் குறித்துப் பேசவில்லை. ஏனெனில் சாராள் மரித்த பின்பு, ஆபிரகாம் வேறொரு ஸ்திரீயை மணந்துகொண்டான்; அவள் மூலம் ஏழு குமாரர்களும், அது தவிர குமாரத்திகளும் பிறந்தனர். 'ஆபிரகாமின் சந்ததிகள்' எனப்படாமல், "ஆபிரகாமின் சந்ததி” என்று ஒருமையில் கூறப்பட்டுள்ளது. அது தான் ஆபிரகாமின் விசுவாச சந்ததி. அவனுடைய விசுவாசத்தின் மூலம் தோன்றின ராஜரீக சந்ததியையே அது சுட்டிக் காண்பிக்கின்றது. அது ஆபிரகாமின் மாமிசபிரகாரமான ஜீவனாயிராமல், அவனுடைய ஆவிக்குரிய ஜீவனாய் இருக்கிறது. ஆபிரகாம் தேவனுடைய வார்த்தைக்கு முரணாயுள்ள அனைத்தையும் தள்ளிவிட்டு, இல்லாதவைகளை இருக்கிறவைகள் போல் அழைக்கும் தேவனை விசுவாசித்தான். நம்பிக்கையற்ற நிலையிலும் அவன் நம்பிக்கையோடே விசுவாசித்தான். "ஆதலால், சுதந்தரமானது கிருபையினால் உண்டாகிறதாயிருக்கும்படிக்கு அது விசுவாசத்தினாலே வருகிறது; நியாயப்பிரமாணத்தைச் சார்ந்தவர்களாகிய சந்ததியாருக்கு மாத்திரமல்ல, நம்மெல்லாருக்கும் தகப்பனாகிய ஆபிரகாமுடைய விசுவாச-த்தைச் சார்ந்தவர்களான எல்லாச் சந்ததியாருக்கும் அந்த வாக்குத்தத்தம் நிச்சயமாயிருக்கும்படிக்கு அப்படி வருகிறது. அநேக ஜாதிகளுக்கு உன்னைத் தகப்பனாக ஏற்படுத்தினேன் என்று எழுதி இருக்கிறபடி, அவன் தான் விசுவாசித்தவருமாய், மரித்தோரை உயிர்ப்பித்து, இல்லாதவைகளை இருக்கிறவைகளைப் போல் அழைக்கிறவருமாயிருக்கிற தேவனுக்கு முன்பாக நம்மெல்லாருக்கும் தகப்பனானான். உன் சந்ததி இவ்வளவாயிருக்கும் என்று சொல்லப்பட்டபடியே, தான் அநேக ஜாதிகளுக்குத் தகப்பனாவதை நம்புகிறதற்கு ஏதுவில்லாது இருந்தும், அதை நம்பிக்கையோடே விசுவாசித்தான்.” ரோமர்.4:16-18. இந்த உண்மையான சந்ததியைக் குறித்தே நாம் இப்பொழுது பேசிக் கொண்டிருக்கிறோம். 54. அந்த சந்ததியின் தோற்றத்தைக் குறித்த ஒரு காட்சி நமக்கு இங்கு அளிக்கப்படுகின்றது. வாக்குத்தத்தத்தின் சந்ததி தேவனுடைய வாக்குத் தத்தத்தை சந்தேகிப்பதுடன் தொடங்குகிறது. தேவனுடைய வாக்குத்தத்தத்தை சந்தேகிக்கும் அளவிற்கு அது எவ்வளவு கீழ்த்தரமாய் தொடங்குகிறது பாருங்கள்! சாராளின் மூலம் ஆபிரகாம் ஒரு குமாரனைப் பெறுவான் என்று தேவன் வாக்களித்திருந்தார். இது நிறைவேறுமோ என்று சாராள் சந்தேகித்ததன் விளைவாக ஆபிரகாமின் முதலாம் சந்ததி அடிமை ஆனவளின் மூலம் தோன்றினது. சாராள் வயது சென்றவளாயிருந்தாள்; ஸ்திரீகளுக்குள்ள வழிபாடு அவளுக்கு நின்று போயிருந்தது. எனவே அவள் தேவனுடைய வாக்குத்தத்தத்தை சந்தேகிக்க முற்பட்டாள். 55. சபையும் அது போன்றே ஆரம்பமானது. அது எப்பொழுதும் அவ்வாறே தொடங்குகின்றது. அது கீழ் நிலையிலிருந்து ஆரம்பிக்கின்றது, மேல் நிலையிலிருந்து அல்ல. ஏணியின் மேல் ஏறும் ஒரு மனிதன், முதலிலேயே உயரத்திலிருந்து ஏற முயன்றால், அவன் கீழே விழுந்து கழுத்தை ஒடித்துக் கொள்ள நேரிடும். நீங்கள் கீழ் நிலையிலிருந்து தொடங்கி, படிப்படியாய் ஏற வேண்டும். தேவனுடைய வாக்குத்தத்தத்தை சிறிது சந்தேகித்ததன் விளைவாக தேவனுடைய திட்டம் தடைபடுவதை நாம் காண்கிறோம். 56. அவ்வாறே பாவமும் ஏதேன் தோட்டத்தில் தொடங்கினது. பாவத்தினால் மரணம் அங்கு பிரவேசித்தது - தேவனுடைய ஒரே ஒரு வார்த்தை தவறாகப் புரிந்து கொள்ளப்படுவதனாலும், சந்தேகிக்கப்படுவதனாலும் இது நிகழ்கின்றது. தேவனுடைய வார்த்தையை நீங்கள் சந்தேகிக்கவோ அல்லது தவறான இடத்தில் பொருத்தவோ கூடாது. ஏனெனில் அது "கர்த்தர் உரைக்கிறதாவது”. 57. சபைக்கு எடுத்துக்காட்டாய் விளங்கும் சாராள் என்பவள் தேவனுடைய வாக்குத்தத்தத்தை அடிப்படையாய் கொண்டுள்ள அவருடைய மூலதிட்டத்தை சந்தேகிக்கிறாள். அவள், "என் கணவனான ஆபிரகாமே, இந்த அழகான அடிமைப் பெண்ணை ஏற்றுக்கொண்டு அவளுக்கு கணவனாயிரும். வாக்குத் தத்தம் செய்யப்பட்ட குமாரனை தேவன் அவள் மூலம் தருவார். அந்த குழந்தையை நான் எடுத்துக் கொள்கிறேன்” என்று கூறியிருப்பாள். பாருங்கள், ஒரு சிறு பாகத்தை அசட்டை செய்தல், தேவனுடைய முழு திட்டத்தையே மாற்றி விட்டது. தேவனுடைய வார்த்தை ஒவ்வொன்றையும், "கர்த்தர் உரைக்கிறதாவது” என்னும் விதத்தில் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். 58. தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையும் சத்தியமாயிருக்கிறது. சுயாதீனம் உள்ளவளின் மூலம் தோன்றின ஈசாக்கு வாக்குத்தத்தம் செய்யப்பட்ட சந்ததியாக இருந்தமையால், வாக்குத்தத்தம் செய்யப்பட்ட மாம்சப்பிரகாரமான சந்ததியாக அவன் வளர்க்கப்பட்டான் என்று பவுல் கலாத்தியருக்கு எழுதின நிருபத்தில் விவரிக்கிறான். அடிமையானவளின் புத்திரன் சுயாதீனம் உள்ளவளின் புத்திரனுடன் சுதந்தரவாளியாயிருக்க முடியாது. ஏனெனில், அவர்களிருவரும் வெவ்வேறு சாரார் என்று பவுல் தொடர்ந்து கூறுகிறான், அது உண்மை . 59. அவிசுவாசி விசுவாசியுடன் சுதந்தரவாளியாயிருக்க முடியாது. அங்கு தான் இன்று தொந்தரவே உண்டாகின்றது. ஸ்தாபனத்தைச் சார்ந்த ஒரு கோழிக் குஞ்சை, கழுகைப் போல் விசுவாசிக்க செய்ய உங்களால் கூடாது. அது முடியவே முடியாது. தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையும் நீங்கள் வசுவாசிக்க வேண்டும். இவ்விருவரும் ஒருமித்து சுதந்தரவாளியாக இருக்க முடியாது. மாத்திரமல்ல, ஒரு விசுவாசியும் ஸ்தாபனங்களின் முறைமைக-ளுடன் இணைந்து கொள்ள முடியாது. ஒன்று நீங்கள் கழுகாக இருக்க வேண்டும், இல்லையேல் கோழிக் குஞ்சாக இருக்க வேண்டும். 60. சாராள் தேவனுடைய வார்த்தையை சந்தேகித்தாள். தேவன் அதை நிறைவேற்ற முடியுமா என்னும் கேள்வி அவள் மனதில் எழுந்தது. கவனியுங்கள், ஆபிரகாம் சந்தேகிக்கவில்லை. சாராள் தான் சந்தேகித்தாள். அவ்வாறே ஆதாம் அல்ல, ஏவாள் தான் சந்தேகித்தாள். 61. மாமிசப் பிரகாரமானவர்கள் ஆவிக்குரியவர்களுடன் சுதந்தரவாளியாக இருக்க முடியாது. இஸ்மவேலின் புத்திரர் ஈசாக்கின் புத்திரருடன் சுதந்தர-வாளியாக இருக்கவே முடியாது. 62. மாம்சப்பிரகாரமான சபையும் ஆவிக்குரிய சபையும் உண்டு. இங்கு கூறப்பட்டுள்ள இரு ஸ்திரீகளும் மாமிசப்பிரகாரமான சபைக்கு எடுத்துக் காட்டாய் விளங்குகின்றனர். ஆவிக்குரிய சபை ஒன்று உண்டு, இவ்விரு சபைகளும் ஒன்றோடொன்று சுதந்தரவாளியாக இருக்கமுடியாது. ஒவ்வொரு காலத்திலும் இவ்விருசபைகளும் வித்தியாசமுள்ளதாய் அமைந்து, வெவ்வேறு மக்களைக் கொண்டதாய், வெவ்வேறு உடன்படிக்கையின் அடிப்படையில் தோன்றின. 63. எனவே 'எடுத்துக்கொள்ளப்படுதல்' என்பது மக்கள் கொண்டிருக்கும் கருத்துக்களினின்று வித்தியாசப்பட்டது. அது ஆபிரகாமின் ராஜரீக சந்ததிக்கே உரியது. மாமிசப்பிரகாரமான சபையிலுள்ள மக்கள் அதில் பங்கு கொள்வது இல்லை. ஆபிரகாமின் மூலம் தோன்றின தேவனுடைய வார்த்தையாகிய ராஜரீக சந்ததிக்கு மாத்திரமே அது உரியது. 'எடுத்துக் கொள்ளப்படுதல்' முதலாவது நிகழ வேண்டும். "கர்த்தருடைய வார்த்தையை முன்னிட்டு நாங்கள் உங்களுக்குச் சொல்லுகிறாதாவது: கர்த்தருடைய வருகை மட்டும் உயிரோடிருக்கும் நாம் நித்திரையடைந்தவர்களுக்கு முந்திக் கொள்வதில்லை. ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும், வானத்திலிருந்து இறங்கி வருவார், அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்து இருப்பார்கள். பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டு போக, மேகங்கள் மேல் அவர்களோடே கூட ஆகாயத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனே கூடஇருப்போம்”. (1-தெச 4:15-17). மேலும், "மரணமடைந்த மற்றவர்கள் அந்த ஆயிரம் வருஷம் முடியுமளவும் உயிரடையவில்லை” (வெளி 20:5) என்று எழுதப்பட்டுள்ளது. 64. எனவே இவ்விரு சாரரும் ஒருமித்து சுதந்தரவாளிகளாயிருப்பதில்லை. அவ்வாறே எடுத்துக்கொள்ளப்படுதலிலும் அவர்கள் ஒருமித்து பங்குகொள்வது இல்லை. மாமிசப்பிரகாரமான சபை ஒன்றும் ஆவிக்குரிய சபை ஒன்றும் நிச்சயமாக உண்டு. 65. ஆபிரகாமின் ராஜரீக, ஆவிக்குரிய, முன் குறிக்கப்பட்ட சந்ததிக்கு நியாயத்தீர்ப்பு கிடையாது. ஏனெனில் அவர்கள் நித்திய ஜீவனுக்கென்று ஏற்கனவே முன் குறிக்கப்பட்டு விட்டனர், தேவனால் செலுத்தப்பட்ட பலியை அவர்கள் ஏற்றுக்கொண்டு விட்டனர். அந்த பலி வார்த்தையாகிய கிறிஸ்துவே. "என் வசனத்தைக் கேட்டு என்னை அனுப்பினவரை விசுவாசிக்-கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத் தீர்ப்புக்கு உட்படாமல், மரணத்தை விட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்”. யோவான்-5:24 "ஆனபடியால் கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாய் இருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்க-ளுக்கு ஆக்கினைத்தீர்ப்பிலை”. ரோமர்.8:1 "என் வசனத்தைக் கேட்டு....”, “கேட்டு” என்னும் பதம் புரிந்து கொள்ளுதலைக் குறிக்கின்றது. ஒரு குடிகாரன் அல்லது வேறு யாராவது அதை கேட்டு விட்டு சென்றுவிடலாம். ஆனால், "என் வசனத்தை கேட்டு,” "என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத்தீர்ப்புக்குட்படாமல், மரணத்தை விட்டு நீங்கி, ஜீவனுக்கு உட்பட்டிருக்கிறான்”. இந்த மகத்தான தேவனுடைய இரகசியம் யாருக்கு வெளிப்படுகின்றதோ அவன், தேவன் எவ்விதம் கிறிஸ்துவுக்குள் வாசம் செய்து உலகத்தை தம்முடன் ஒப்புரவாக்கிக் கொண்டார் என்பதைப் புரிந்து கொள்வான். அப்படிப்பட்டவர்கள் பிதாவும் இயேசுவும் எவ்விதம் ஒன்றாய் இருக்கின்றனர் என்பதையும் புரிந்து கொள்வார்கள். மானிடரின் காலத்தில் தேவன் எவ்விதம் மாமிசத்தில் அவர்கள் மத்தியில் தோன்றினார் என்பதையும், சூரியன் கிழக்கில் உதித்த போது அவர் எவ்வாறு தம் வார்த்தையை வெளிப்படுத்தனாரோ, அவ்வாறே சூரியன் மேற்கில் அஸ்தமனம் ஆகும் போது அதை மறுபடியும் நிறைவேற்றி, மணவாட்டி சபையில் தம்மை வார்த்தையாக வெளிப்படுத்துவார் என்பதையும் அவர்கள் அறிந்து கொள்வார்கள். கிறிஸ்துவே இதை அவர்களுக்கு வெளிப்படுத்தினார் என்பதை அத்தகையோர் புரிந்து கொள்வார்கள்."... என்னை அனுப்பபினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு, அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல் (அதாவது நியாயத்தீர்ப்புக்குட்படாமல்) மரணத்தை விட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டு இருக்கிறான்.” 66. மாமிசத்துக்குரிய வித்து, ஆவிக்குரிய வித்தை அதன் வழியாகக் கடத்தும் கருவியாக (carrier) அமைந்துள்ளது. அது தண்டு, பட்டுக் குஞ்சம் (tassel), பதர் இவைகளைப் போன்றது. இதைக் குறித்து நாம் வேறொரு செய்தியில் குறிப்பிட்டு இருக்கிறோம். மறுபடியும் அதை சற்று நினைவுபடுத்த விரும்புகிறேன். வித்தின் மூன்று கட்டங்கள் உண்மையான காட்சியை சித்தரிப்பதாக அமைந்துள்ளன. 67. பூமியில் வளரும் வித்து மூன்று கட்டங்களைக் கொண்டது. புதைக்கப்பட்ட வித்து முதலில் தண்டைக் கொண்டு வருகின்றது. பின்பு சிறு கதிர் அதனின்று தோன்றி, மகரந்தப் பொடியை சுமக்கும் பட்டுக் குஞ்சமும் (tassel), பதரும் முறையே உண்டாகி, முடிவில் மறுபடியும் வித்து தோன்றுகின்றது. 68. இந்த உதாரணத்தில் காணப்படும் வித்து வளர்ச்சியின் மூன்று கட்டங்களை நன்கு கவனித்து, ஆவிக்குரியவைகளுக்கு அவை எவ்விதம் அடையாளங்களாக அமைந்துள்ளன என்பதைப் பாருங்கள். தேவனே இயற்கையின் சிருஷ்டி கர்த்தர். எனவே, எப்படி தேவன் தவறாக இருக்க முடியாதோ அப்படியே இயற்கையும் தவறாக இருக்க முடியாது. அவர் தான் இத்தகைய சூழ்நிலையை உருவாக்கினவர். 69. தண்டாகிய ஆகாரைக் கவனியுங்கள், வித்து விளையத் தொடங்கினபோது, அவள் தான் முதலில் தோன்றினவள். காண்பதற்கு அது வித்தைப் போல் இல்லை. ஏனெனில் அது ஒரு தண்டு மாத்திரமே. அவள் ஒரு அடிமைப் பெண். தேவன் அளித்திருந்த வாக்குத்தத்தத்தில் அவளுக்கு எந்த பாகமும் கிடையாது. தேவனுடைய வார்த்தைக்கும் அவளுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. அவள் வித்தை மேலே கொண்டு செல்லும் (transporter) கருவியாக மாத்திரம் இருந்தாள். 70. சாராளைக் கவனியுங்கள். அவள் தான் மகரந்தப் பொடியாகிய யூத குலத்தை சுமந்த பட்டுக் குஞ்சம். அவள் மூலம் யூத வம்சம் தோன்றினது. சாராள் ஈசாக்கைப் பெற்றாள். ஈசாக்கு யாக்கோபைப் பெற்றான். யாக்கோபின் மூலம் பன்னிரண்டு கோத்திரத் தலைவர்கள் (patriarchs) தோன்றினர். அந்த பன்னிருவர் மூலம் யூத குலமே உருவானது. 71. ஆனால் கன்னிகையாகிய மரியாளின் மூலம், விசுவாசம் என்பது, வார்த்தை என்னும் உண்மையான ஆவிக்குரிய வித்து மாமிசத்தில் வெளிப்படச்செய்தது. இந்த மூன்று ஸ்திரீகளையும் கவனித்தீர்களா? இவர்களின் மூலம் வித்து கடந்து சென்றது. அவர்களில் ஒருவள், பல பெண்களை விவாகம் செய்து கொள்ளுதல் (polygamy) என்னும் நியமத்தின்படி விபச்சாரியாகக் கருதப்பட வேண்டியவள். மற்றொருவள் சுயாதீனமானவள். ஆனால் மூன்றாவது பெண் இனசேர்க்கையில் ஈடுபடவில்லை. அவள் தேவனுடைய வார்த்தையை விசுவாசித்தாள். ஆகாரும் சாராளும் இனச்சேர்க்கையின் மூலம் தங்கள் வித்துக்களைத் தோன்றச் செய்தனர். ஆனால் மரியாளோ ஒரு கன்னிகை. வாக்களிக்கப்பட்ட தேவனுடைய வார்த்தையின் வல்லமையின் மூலம் அவள் தன் வித்தை தோன்றச் செய்தாள். அது உண்மை . 72. ஆபிரகாமின் இரு மனைவிகளும் தேவனுடைய வாக்குத்தத்தத்தின் பேரில் சந்தேகம் கொண்டனர். ஆபிரகாமின் வைப்பாட்டியாகிய ஆகார் என்னும் தண்டு ஒரு மகனை ஈன்றாள். அவன் எத்தகையவன் என்பதைக் கவனித்தீர்களா? அவன் வனாந்தரத்தில் சஞ்சரித்த மூர்க்கன் என்று வேதம் கூறுகின்றது. அவன் வில் வித்தையில் வல்லவனாயிருந்தான். எந்த மனிதனும் அவனை மேற்கொள்ள முடியவில்லை. அவனை யாருமே அடக்க முடியவில்லை . அவன் காட்டு மனிதனாக வாழ்ந்தான். அவன் தேவனுடைய வார்த்தைக்கு முரணாகப் பிறந்தவன். தேவனுடைய வார்த்தைக்கு முரணாய் உள்ள எதுவும் அது போதகராயிருந்தாலும், ஸ்தாபனத்தின் அங்கத்தினராக இருந்தாலும், சபையாக இருந்தாலும் சரி - முரட்டு விபச்சாரியை அல்லது ஹாலிவுட் பட்டிணத்தவர் போன்று ஆபாசங்களை விரும்பும் ஒரு குழுவையே பிறப்பிக்கும். தேவனுடைய கலப்படமற்ற வார்த்தையில் அவன் நிலை கொள்ளவில்லை. ஏனெனில் அவன் தேவனுடைய வாக்குத்தத்தத்தில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. 73. தேவனுடைய வாக்குத்தத்தத்தை நிறைவேற்ற வேண்டிய ஆபிரகாமின் உண்மையான மனைவியாகிய சாராள் பட்டுக் குஞ்சமாக இருந்ததால், ஒரு சான்றோனை ஈன்றாள். தேவனை ஆராதிக்கும் ஒரு வம்சத்தை, தேவனுடைய வாக்கின்படியே, அவன் தோன்றச் செய்தான். ஆனால் மரியாள் எவ்வித இனச்சேர்க்கையும் இன்றி, தேவனுடைய வாக்குத் தத்தத்தை விசுவாசித்ததன் மூலம் உண்மையான ஆவிக்குரிய வித்தை தோன்றச் செய்தாள். அவள் புருஷனை அறியாத ஒரு கன்னிகையாய் இருந்த போது, கர்த்தருடைய தூதன் அவளைச் சந்தித்து, "கிருபை பெற்றவளே, வாழ்க, கர்த்தர் உன்னுடனே இருக்கிறார்” என்று அவளை வாழ்த்தினான். “அவள் இருந்த வீட்டில் தேவதூதன் பிரவேசித்து: கிருபை பெற்றவளே, வாழ்க, கர்த்தர் உன்னுடனே இருக்கிறார், ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள் என்றான். 74. அவளோ அவனைக் கண்டு, அவனுடைய வார்த்தையினால் கலங்கி, இந்த வாழ்த்துதல் எப்படிப்பட்டதோ என்று சிந்தித்துக் கொண்டிருந்தாள். 75. தேவதூதன் அவளை நோக்கி: மரியாளே, பயப்படாதே; நீ தேவனிடத்தில் கிருபை பெற்றாய். இதோ, நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய் அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக, அவர் பெரியவராயிருப்பார், உன்னதமானவருடைய குமாரன் என்னப்படுவார்; கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார். அவர் யாக்கோபின் குடும்பத்தாரை என்றென்றைக்கும் அரசாளுவார்; அவருடைய ராஜ்யத்துக்கு முடிவிராது என்றான். அதற்கு மரியாள் தேவதூதனை நோக்கி: இது எப்படியாகும்? புருஷனை அறியேனே என்றாள். தேவதூதன் அவளுக்குப் பிரதியுத்தரமாக: பரிசுத்த ஆவி உன் மேல் வரும்; உன்னதமானவருடைய பலம் உன் மேல் நிழலிடும்; ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும்.” லூக்கா-1:27-35 76. இத்தகைய சம்பவம் முந்தைய காலங்களில் நிகழ்ந்ததில்லை. மரியாள் தேவனை விசுவாசித்தாள். அவள் “இதோ நான் ஆண்டவருக்கு அடிமை” என்றாள். அவள் தேவனுடைய வார்த்தையை விசுவாசித்தாள். அவளுக்கு எப்படி ஒரு குழந்தை பிறக்கும்? ஆபிரகாமுடன் இனச்சேர்க்கை கொண்டதால் ஆகாரும் சாராளும் பிள்ளைகளைப் பெற்றனர் என்பது மரியாளுக்குத் தெரியும். அவள் சுயாதீனமுள்ளவளைக் குறித்தும் அடிமையானவளைக் குறித்தும் நன்கு அறிந்திருந்தாள். ஆனால் இங்கு, கூடாது என்னும் காரியத்தைக் கூடும் என்று விசுவாசித்த ஆபிரகாமின் அதே விசுவாசத்தைக் கொண்டிருக்க வேண்டுமென்று மரியாள் கேட்டுக்கொள்ளப்பட்டாள். ஆண்டவர் ஒன்றைக் கூறினால் அது நிறைவேற வேண்டும். 77. அவள் எவ்வித கேள்வியும் கேட்காமல் தேவனை விசுவாசித்தாள். அவள், "இதோ நான் ஆண்டவருக்கு அடிமை. உலகம் எத்தகைய குற்றத்தை என் மீது சுமத்தினாலும் பரவாயில்லை. உம்முடைய வார்த்தையின்படியே ஆகக் கடவது” என்றாள். அதன் பின்பு உண்மையான வித்து தோன்றினது. 78. ஆகார், இனச்சேர்க்கையின் மூலம் அதை தோன்றச்செய்ய முடியவில்லை. சாராளும் கூட. அது போன்றே சபையும், பாகுபாடுகளின் கீழ் (under sectarianism) அதை தோன்றச் செய்ய முடியாது. தேவனுடைய வார்த்தையிலும் அவருடைய வாக்குத்தத்தத்திலும் ஒரு 'கன்னிகையின் விசுவாசத்தைப் பெற்றிருப்பதால் மாத்திரமே அத்தகைய பிள்ளைகளைத் தோன்றச் செய்ய முடியும். பாகுபாடு ஒரு சீர்திருத்தச் சபையை தோன்றச் செய்ய முடியாது. அதற்குப் பாவனையாகிய ஏதாவதொன்றையே அது பிறப்பிக்க முடியும். அது உண்மையான வித்தை போன்றிருக்க முயலும். ஆனால் மறுபடியும் பிறந்த உண்மையான தேவனுடைய சபையோ எல்லா இடையூறுகளின் மத்தியிலும் கூட தேவனுடைய வார்த்தையை விசுவாசிக்கும். அது கலப்படமற்றது. தேவனுடைய வாக்குத்தத்தத்தின் மூலமே இத்தகைய காரியங்கள் தோன்ற முடியும். 79. உண்மையானவளான மரியாள், "இதோ, நான் ஆண்டவருக்கு அடிமை, உம்முடைய வார்த்தையின்படியே எனக்கு ஆகக் கடவது” என்றாள். அதன் பின்பு அவள் குழந்தையைப் பெற்றாள். அவள் பெற்றெடுத்தவர் யாரென்பதைக் கவனியுங்கள். அவர் மூர்க்கமானவர் அல்ல அல்லது ஒரு குலத்தை தோன்றச் செய்தவர் அல்ல. மரியாள், மாமிசத்தில் வெளிப்பட்ட தேவனையே -வார்த்தையை- ஈன்றாள். வேதத்தில் காணப்படும் தேவனுடைய ஒவ்வொரு வாக்குத்தத்தத்தையும் நிறைவேற்றும் தேவனுடைய உண்மையான வித்தையே, அவள் ஈன்றாள். அவராலேயன்றி எந்த மனிதனும் வாழ முடியாது. 80. மரியாள் தான் கோதுமை மணியைத் தோற்றுவித்த பதர்; மற்ற இருவரும் மாமிசப்பிரகாரமான சந்ததியை தோன்றச் செய்வதற்கு ஜீவனை அவர்கள் வழியாக கடத்தும் கருவிகளாக (carriers) விளங்கினர். நான் மற்ற இருவர் என்று கூறினேன். அதனால் மரியாளை தெய்வமாக்கி விட வேண்டாம். சிலர் அவ்விதம் செய்ய முயல்கின்றனர். அவள் தெய்வம் அல்ல, இல்லை ஐயா. மற்ற இருவரைப் போன்று அவள் வித்தைச் சுமப்பவளாக இருந்தாள். தேவனுடைய வார்த்தையின் பேரிலுள்ள விசுவாசம் நம்மை உண்மையான வரிடத்தில் கொண்டு சேர்க்கிறது. 81. புதைக்கப்பட்ட கோதுமைமணி தண்டைத் தோற்றுவிக்கிறது. பிறகு அதில் மகரந்தப் பொடி உண்டாகி, அதனின்று பதர் தோன்றுகின்றது. நீங்கள் சரியாக கவனிக்காவிட்டால் பதரைக் கண்டு, கோதுமை மணி என்று நினைத்து விடுவீர்கள். அந்த பதர் திறக்கும் போது, அதனுள் உண்மையான கோதுமை மணி காணப்படும். பதரும் வித்தை சுமக்கும் கருவியாக (carrier) இருக்கின்றது. 82. மரியாள் இனச்சேர்க்கையின் மூலமல்ல, விசுவாசத்தின் மூலமே வித்தை சுமந்தாள். அவள் வித்தல்ல, வித்தை சுமந்தவள். இயேசுவே உண்மையான விசுவாச வித்து. ஏனெனில் தேவனுடைய வார்த்தை ஆபிரகாமுக்கு அளிக்கப்பட்டபடியே, விசுவாசத்தின் மூலமாகத்தான் தோன்ற முடியும். தேவனுடைய வார்த்தையின் பேரிலுள்ள விசுவாசம் மாத்திரமே, அவர் என்ன செய்வார் என்று வாக்களித்துள்ளதை தோன்றச் செய்ய முடியும். 83. கவனியுங்கள், மரியாள் எவ்வளவாக உண்மையானதைப் போல் காட்சி அளித்தாள்! பதர் கோதுமை மணியை அணைத்துக் கொண்டு, அது முதிர்வடைந்து தானாக நிற்கும் வரை, அதை போஷித்துப் பாதுகாக்கின்றது. அவ்வாறே பெந்தெகொஸ்தே ஸ்தாபனமும் கோதுமை மணியை தனக்குள் கொண்டு, பதர் திறக்கப்படும் சமயம் வரும் வரை அதை பாதுகாத்து வந்தது. கிறிஸ்துவின் தாயாகிய மரியாளும் கூட அவரைப் பெற்றெடுக்கும் ஒரு கருவியாக (incubator) மாத்திரமே இருந்தாள். இயேசுவில் மரியாளின் இரத்தம் எதுவுமில்லை. அவருக்குள் யூதரின் இரத்தமோ அல்லது புறாஜாதியாரின் இரத்தமோ பாயவில்லை. அவருக்கிருந்தது. தேவனுடைய இரத்தம். தேவன் அந்த இரத்தத்தை சிருஷ்டித்தார். இனச்சேர்க்கையின் மூலம் அவர் தோன்ற முடியாது. அவர் யூதனுமல்ல, புறஜாதியானுமல்ல. 84. குழந்தைக்கு ஒரு சொட்டு தாயின் இரத்தம்கூட கிடையாது. ஏனெனில் இரத்தம் தகப்பனிலிருந்து உண்டாகின்றது. அது ஆணில் தான் உள்ளது. ஒரு பெட்டைக்கோழி முட்டையிடலாம். ஆனால் சேவலுடன் அது சேராமல் இருந்தால் அந்த முட்டை குஞ்சு பொரிக்காது. வெளித் தோற்றத்திற்கு அது கருவைக் கொண்ட முட்டையைப் போல் காணப்படும். ஆனால் குஞ்சு பொரிப்பதற்கு அதனுள் ஜீவன் கிடையாது. 85. கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டதாக கூறும் அநேகரும் அது போன்றே இருக்கின்றனர். வெளிப் பார்வைக்கு அவர்கள் கிறிஸ்தவர்கள் போல் இருக்கின்றனர். கிறிஸ்தவர்களைப் போல் பாவனை செய்யவும் அவர்கள் முயல்கின்றனர். ஆனால் உங்களுக்குள் வார்த்தையாக வெளிப்பட்ட கிறிஸ்து வாசமாயிருக்க வேண்டும். இல்லையேல் நீங்கள் வேதத்தை விசுவாசிக்கும் கிறிஸ்தவர்களாக வளர முடியாது. மாறாக ஸ்தாபனங்களை அடிப்படையாகக் கொண்ட ஒன்றாகவே அது எப்பொழுதும் அமைந்திருக்கும். அதனுள் ஜீவன் இல்லாததனால் அது உயிர் வாழ முடியாது. கருவற்ற ஒரு முட்டை குஞ்சு பொரிக்காது. அது கூட்டில் அழுகிப் போகும். 86. நீங்கள் ஸ்தாபனத்தின் அங்கத்தினர்களைத் தெரிந்தெடுத்து, அவர்களை அவயம் காத்து, மூப்பர்களாக நியமிக்கலாம். ஆனால் ஆணுடன் சம்பந்தம் கலக்காமல் இருக்கும் வரை, உங்கள் கூடுகள் அழுகிய முட்டைகளால் மாத்திரமே நிறைந்திருக்கும். 87. ஒரு உண்மையான வித்து பதரை விட்டு வெளி வரவேண்டும் அல்லது, வித்து சூரிய வெளிச்சத்தில் முதிர்வடைய பதர் அதனை விட்டு விலகிச் செல்ல வேண்டும். இவையனைத்தும் உதாரணங்களாக அமைந்துள்ளன. 88. கவனியுங்கள், இந்த கடைசி காலத்திலுள்ள பெந்தெகொஸ்தே ஸ்தாபனம் உண்மையான வித்தைப்போன்று எவ்வளவு தத்ரூபமாக தோற்றமளிக்கின்றது! புதைக்கப்பட்ட கோதுமை மணியினின்று கதிர் தோன்றுகிறது. இந்த இரண்டாம் கட்டம், மூன்றாம் கட்டமாகிய பதரைத் தோன்றச் செய்கிறது. நீங்கள் சரிவர கவனிக்காவிட்டால், பதருக்கும் கோதுமை மணிக்கும் உங்களால் வித்தியாசம் கண்டு பிடிக்க முடியாது. பதர் கோதுமை மணியைப் போன்றே காணப்படும். ஆனால் நீங்கள் அதை திறந்து பார்த்தால் அதற்குள் கோதுமை மணி இல்லை என்பதைக் கண்டு கொள்வீர்கள். அது கோதுமை மணியைச் சுமக்கும் கருவியாக (carrier) மாத்திரம் விளங்குகின்றது. ஆனால், பதரிலிருந்து தான் கோதுமை மணி தோன்ற வேண்டும். கோதுமை மணி தோன்றுவதற்கு, பதருக்குப் பின்பு வேறெந்த கட்டமும் இல்லை. மரியாளுக்குப் பின்பு வேறெந்த ஸ்திரீக்கும் ஒரு சந்ததி வாக்களிக்கப் படவில்லை. அவ்வாறே பெந்தெகொஸ்தே ஸ்தாபனத்திற்குப் பிறகு வேறெந்த ஸ்தாபனமும் தோன்ற முடியாது. இனி மேல் எடுக்கப்படுதலுக்கென்று நியமிக்கப்பட்ட மணவாட்டி --- வார்த்தை, மறுபடியும் வெளிப்படும்; வித்து மாத்திரமே தோன்ற முடியும் (the Word made manifest again). 89. கடைசி நாட்களில் ஸ்தாபனத்தாரின் ‘ஸ்தாபன ஆவியும், 'மணவாட்டி ஆவியும் ஒன்றுக்கொன்று மிக அருகாமையில் இருக்குமென்றும், கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் அது வஞ்சிக்கும் என்றும் மத்தேயு 24:24 உரைக்கின்றது. அவ்வளவு அருகாமையில் இவ்விரு ஆவிகளும் அமைந்திருக்கும். 90. கவனியுங்கள், வேறொன்ற நாம் இப்பொழுது உதாரணப்படுத்தப் போகின்றோம். மணவாட்டி வித்தை தோன்றச் செய்யும் இவ்வளர்ச்சியில் தன் பாகத்தை வகித்த லூத்தர், தன் சபை காலத்தில் அதே ஆவியைக் கொண்டு இருந்தார். அவர் ஒரு சிறிய கோதுமை மணியில் நிலை கொண்டிருந்தார். அது தான் ‘விசுவாசத்தினால் நீதிமானாக்கப்படுதல்' என்பதாம். அவர் ஆகாரைப் போல் கோதுமை செடியின் தண்டாக விளங்கினார். சாராள், வெஸ்லிக்கு முன்னடையாளமாக இருக்கிறாள். வெஸ்லி வாழ்ந்த பிலதெல்பியா காலம் அன்பைக் கொண்டிருந்தது. அது பட்டுக் குஞ்சத்தைத் தோற்றுவித்தது. மற்ற காலங்களைக் காட்டிலும் வெஸ்லியின் காலத்தில் தான் சுவிசேஷகர்கள் அதிகம் பேர் தோன்றினர். 91. பெந்தெகொஸ்தே ஸ்தாபனத்திற்கு மரியாள் எடுத்துக்காட்டாக இருக்கிறாள். இது தான் வளர்ச்சியின் கடைசி கட்டம். மரியாள் வித்து அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள். வித்தின் ஜீவன் அவளுக்குள் இருந்தது. ஆனால், அது முதிர்வடையவில்லை. ஓ, இப்பொழுது நான் பக்தி பரவசப் படுகின்றேன். அது அவளுக்குள் இருந்த போதிலும், முதிர்வடையாத நிலையில் இருந்தது. அது போன்று தான் பெந்தெகொஸ்தே காலமும்கூட, ஸ்தாபனமற்ற தேவனுடைய வார்த்தை அந்த ஸ்தாபனத்தின் வெளிப்புறத்தில் இப்பொழுது தோன்ற வேண்டும். 92. 'விசுவாசத்தினால் நீதிமானாக்கப்படுதல்' என்னும் 'முதலாம் வார்த்தை' லூத்தருக்கு உண்டாகி, அவர் உமியாகி விட்டார். வெஸ்லிக்கு, 'பரிசுத்தமாக்கப்படுதல்' என்னும் 'இரண்டாம் வார்த்தை ” உண்டானது. அது கிருபையின் இரண்டாவது கிரியையாகும். பெந்தெகொஸ்தே ஸ்தாபனம், 'வரங்கள் புதுப்பிக்கப்படுதல்' என்னும் 'மூன்றாம் வார்த்தையை கொண்டு இருந்தது. ஆனால் இதற்குப் பின்பு தான் எல்லா கோதுமை மணிகளும் தோன்ற வேண்டும். அவர்கள் 'முதலாம் வார்த்தை ', 'இரண்டாம் வார்த்தை ', 'மூன்றாம் வார்த்தை' இவைகளின் பேரில் ஸ்தாபனங்கள் உண்டாக்கிக் கொண்டனர் என்பதை கவனியுங்கள். ஆனால் ஸ்தாபனம் உண்டாக்க முடியாத ஒன்று இருக்க வேண்டும். அது தான் நமக்குள் இருக்கும் பரிபூரண ஜீவனாகும். அது மறுபடியும் மணவாட்டிக்குள் தன்னை உற்பத்தி செய்ய வேண்டும். இதற்கு பின்பு வேறொரு சபை காலம் இருக்க முடியாது. சகோதரனே, சகோதரியே, நாம் கடைசி காலத்தில் இருக்கிறோம். நாம் இங்கு வந்து விட்டோம். கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! ஆமென். இவை அனைத்தையும் நாம் தத்ரூபமாகக் காண்கிறோம். 93. வெஸ்லி பட்டுக் குஞ்சமாக இருந்தார். பெந்தெகொஸ்தே ஸ்தாபனம் பதராக இருந்தது. கோதுமை மணி தோன்றுவதற்கு முன்பு உள்ள கட்டம் தான் இது. சகோதரனே, சகோதரியே, தண்டு கோதுமை மணியல்ல! அவ்வாறே பட்டுக் குஞ்சமும் கோதுமை மணியல்ல! பதரும் கோதுமை மணியல்ல! ஒவ்வொரு முறை அது முதிர்வடையும் போதும், அது கோதுமை மணியைப் போன்று காணப்படும். 94. முதலில் தண்டு தோன்றுகின்றது. ஆனால் அது கோதுமை மணியைப் போல் இல்லை. பின்பு பட்டுக் குஞ்சம் வருகின்றது. அது தண்டைக் காட்டிலும் சற்று அதிகம் கோதுமை மணியைப் போல் இருக்கின்றது. இவைகளுக்குப் பின்பு பதர் தோன்றுகிறது. அது கோதுமை மணியைச் சுமந்து அதை போஷிக்கின்றது. 95. ஆபிரகாமுக்கு தேவன் அளித்த வாக்குத்தத்தத்தை சற்று கவனியுங்கள்... 'உன் சந்ததி'. அது ஆவிக்குரிய சந்ததியையே குறிக்கின்றது. ஈசாக்-யை அல்ல, இயேசுவையே குறிக்கின்றது என்பதை நாமறிவோம். 96. முதலாவது பிறந்தவன் அடிமையானவளுக்குப் பிறந்தவன். அது வாக்குத் தத்தத்தின் நிறைவேறுதலாக சற்றேனும் காணப்படவில்லை. தேவன் யார் இடத்திலாகிலும் அளித்த வாக்குத்தத்தத்தை வாபஸ் வாங்கினது கிடையாது. எப்படி நிகழும் என்று அவர் கூறினாரோ, அது அப்படியே நிகழ வேண்டும். சாராள் சபைக்கு முன்னடையாளமாக இருந்தாள். அவள், "அது சற்று அசாதாரணமாயுள்ளது (unusual). அவர் கூறிய விதமாக நிகழும் என்று என்னால் நம்ப முடியவில்லை. நீங்கள் ஆகாரை உங்கள் மனைவியாக ஏற்றுக் கொள்ளுங்கள்” என்று ஆபிரகாமிடம் கூறினாள். அந்த தண்டு தேவனுடைய வாக்குத்தத்தத்தின் நிறைவேறுதலாக சற்றேனும் காணப் படவில்லை. ஆனால், சாராள் பிள்ளை பெற்ற போது, அது ஆகாரைக் காட்டிலும் சற்று அதிகமாக தேவனுடைய வாக்குத்தத்தத்தின் நிறைவேறுதல் போல் காணப்பட்டது. ஆயினும் உண்மையில் அது அங்ங்ஙனம் அமையவில்லை. ஏனெனில், ஈசாக்கின் மூலம் தோன்றின இஸ்ரவேல் ஜனங்கள் தவறிழைத்து, உண்மையான சந்ததியாகிய இயேசுவை மறுதலித்தனர். அல்லேலூயா! இஸ்ரவேலர் அந்த உண்மையான வித்தை மறுதலித்து, அவரைச் சிலுவையில் அறைந்து கொன்றனர். 97. பவுல் அதை அருமையாக விவரித்துள்ளான். அடிமையானவளின் மகன் சுயாதீனமுள்ளவளின் புத்திரனைத் துன்பப்படுத்தவில்லையா? அவ்வாறே உண்மையான கோதுமை மணியை ஸ்தாபன வித்துக்கள் துன்புறுத்தும். அது அவ்விதமாகவே இருக்கும். அவர்கள் ஒருமித்து சுதந்திரவாளியாய் இருப்பதில்லை. அவர்கள் ஒருவரோடொருவர் சம்மந்தப்படுவதில்லை. வெவ்-வேறு காலங்களில் அவர்கள் இருவருக்கும் வெவ்வேறு வாக்குத்தத்தங்கள் அளிக்கப்பட்டன. அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் வித்தியாசப் பட்டவர்கள். ஒரு சாரார் மணவாட்டி; மற்றொருவர் ஸ்தாபனம். அவர்கள் இருவருக்கும் எவ்வித ஒப்பனையுமில்லை . 98. அவர்கள், வரவேண்டுமென்று வாக்களிக்கப்பட்ட சந்ததியல்ல. சாராளும், ஆகாரும், மரியாளும் அந்த வித்தல்ல. ஆனால் மரியாள் அந்த வித்தை சுமந்தவள். அவள் அதை போஷித்தாள். எவ்விதம் உண்மையான வித்து பதரினின்று வெளி வருமோ, அது போன்று உண்மையான வித்து மரியாளின் கருப்பையிலிருந்து வெளி வந்தது. பதர் வித்தாயிருக்க முடியாது. சுற்றிலும் அது வித்தை அணைத்துக் கொண்டிருக்கிறது. அந்த ஜீவன் தண்டில் சிதறியிருந்தது. அந்த ஜீவன் தண்டை விட்டு மகரந்தப் பொடியை அடைந்த போது, சிதறியிருந்த ஜீவன் ஒன்றுக்கொன்று அருகாமையில் வருகின்றது, பின்பு அது பதரை அடையும் போது, அது ஒருங்கே சேர்ந்து, ஏறக்குறைய வித்தைப்போலவே மாறுகின்றது. ஆனால் அந்த சத்து, பதரையும் விட்டுச்செல்கின்றது. ஏனெனில், பதர் வித்தை சுமக்கும் ஒரு கருவி மாத்திரமே. நமது ஸ்தாபனங்களும், அதே நிலையில் அமைந்துள்ளன. அவை ஒவ்வொன்றும் ஜீவனை வழியாக கடத்தி செல்வதற்கென நியமிக்கப்பட்டவைகளாயிருந்தன. லூத்தர், வெஸ்லி, பெந்தெகொஸ்தேயினர். ஆனால் இப்பொழுதோ வித்து தோன்றும் சமயம் வந்து விட்டது. 99. வித்தை இவ்வாறு சுமந்தவர்கள் தேவனுடைய வார்த்தையின் ஒரு பாகமாக இருப்பவர்கள். ஆனால் அவர்கள் அந்த வார்த்தையை முழுமையாகக் கொண்டிருக்கவில்லை. லூத்தர் 'நீதிமானாக்கப்படுதல்' என்பதைப் பெற்றிருந்தார். வெஸ்லி, 'பரிசுத்தமாக்கப்படுதல்' என்பதையும், பெந்தெகொஸ்தேயினர் “வரங்கள் புதுப்பிக்கப்படுதல்' என்பதையும் பெற்று இருந்தனர். 'நீதிமானாக்கப்படுதல்' என்பது ஒருவனை இரட்சிக்க முடியும். அதை நீங்கள் நம்புகின்றீர்களா? நிச்சயமாக. ஏனெனில், அது தேவனுடைய வார்த்தையைச் சுமந்த ஒன்றாக இருக்கின்றது. பின்பு 'பரிசுத்தமாக்கப்படுதல்' தோன்றினது. உங்களில் எத்தனை பேர் 'பரிசுத்தமாக்கப்படுதல்' என்பதை விசுவாசிக்கிறீர்கள்? நீங்கள் வேதத்தை விசுவாசித்தால் அதையும் விசுவாசிக்க வேண்டும். இது சற்று அதிகம் மூலவித்தைப் போல காணப்படுகின்றது. பின்னர் 'வரங்கள் புதுப்பிக்கப்படுதல்' என்பதுடன் பெந்தெகொஸ்தேயினர் தோன்றி அன்னிய பாஷை பேசினர். அது பரிசுத்த ஆவியைப் பெற்றதன் ஆரம்ப அடையாளம் என்று அவர்கள் விசுவாசிக்கின்றனர். ஆரம்ப அடையாளம் என்று அவர்கள் அழைப்பது எதை பிறப்பித்தது? அது பதரைத் தோன்றச் செய்தது. அவர்கள் ஸ்தாபனத்தை உண்டாக்கிக் கொண்டனர். ஆனால், "நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்” என்பதைப் போன்ற தேவ வசனங்களை ஏற்றுக் கொள்ளும் நிலைக்கு நீ வருவாயானால், பதர் உன்னை விட்டு அகன்று விடும். உண்மையான மணவாட்டி சபை தேவனுடைய வார்த்தையின் பரிபூரணத்தை முழுமையாக அதனின்று தோன்றச் செய்யும். ஏனெனில், அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருகிறார். (எபி 13:8) கவனியுங்கள், மரியாளின் கருப்பையில் ஒரு வித்து இருந்தது. 100. அந்த வித்து பிரசவமாகி வெளிவந்த பிறகு, "என்னை அனுப்பினவர் உடைய சித்தத்தின்படி செய்வதே என்னுடைய போஜனமாயிருக்கிறது” (யோவான் 4:34) என்றும், "நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்” (யோவான் 10:30) என்றும், "என் பிதாவின் கிரியைகளை நான் செய்யாதிருந்தால், நீங்கள் என்னை விசுவாசிக்க வேண்டியதில்லை” (யோவான்-10:36) என்றும், "என்னிடத்தில் பாவம் (அவிசுவாசம்) உண்டென்று உங்களில் யார் என்னைக் குற்றப்படுத்தக்கூடும்” (யோவான் 8:46) என்றும் கூறினது, அதுதான் வித்து. "நான் என்ன செய்வேன் என்று வேதம் வாக்களித்த அனைத்தையும் நான் செய்து முடித்தேன். தேவன் அதை என் மூலம் நிரூபித்து விட்டார்” என்று இயேசு கூறினார். 101. பதராகிய மரியாள், பார்வைக்கு அவளுக்குள்ளிருந்த வித்தைப் போல் காணப்பட்டாலும், அவள் வித்தல்ல. வித்து அவளுடைய கருப்பைக்குள் இன்னமும் இருந்தது. வெளிப்படுத்தல்-10ம் அதிகாரத்தின்படி, 7-முத்திரைகள் திறக்கப்படும் போது, தேவனுடைய முழு வார்த்தையும் மறுபடியுமாக தோன்றி, தேவனுடைய ஆவியினால் அற்புதங்களாலும் அடையாளங்களாலும் உறுதிப்படுத்தப்படும். அது முழு வல்லமையுடன் அதே விதமாக வெளிப்பட்டு, அந்த வித்து இவ்வுலகில் இருந்தபோது செய்த கிரியைகளையே மறுபடியும் செய்யும். ஆமென். "இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராய் இருக்கிறார்.” எபி 13:8 "மனுஷகுமாரன் வெளிப்படும் நாளிலும் அப்படியே நடக்கும்.'' லூக் 17:30 102. உலகம் சோதோமின் நிலையில் உள்ளது. ஸ்தாபனங்களும், லோத்தும் அவன் மனைவியும் போல, அதனுடன் சோதோமின் நிலைக்குச் சென்று விட்டன. ஆனால் தெரிந்து கொள்ளப்பட்ட சபை ஒன்று எங்கோ இருக்கின்றது. தேவனுடைய வெளிப்படுதல் அதன் கவனத்தைக் கவர்ந்து விட்டதன் காரணத்தால், அது ஸ்தானபங்களினின்று பிரித்தெடுக்கப்பட்டு வெளியே கொணரப்பட்டது. நாம் கடைசி நாட்களில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். 103. பதர் தனது ஜீவனை வித்துக்கு அளித்து விட்டு, அதனின்று பிரிந்து விட்டது. அது ஒரு நல்ல பதர் தான். ஆனால் அதன் காலம் முடிவடைந்து விட்டது. இப்பொழுது உள்ளது 'வார்த்தை மணவாட்டியின் காலமும், 'வார்த்தை மணவாளனின்' காலமாம். 104. ஆபிரகாமின் மாமிசப்பிரகாரமான வித்துக்களாகிய ஈசாக்கு, இஸ்மவேல் போன்றவர் பூமிக்கடியில் செல்ல வேண்டியிருந்தது. பதர் சாக வேண்டும், மகரந்தப்பொடி சாக வேண்டும். வித்து தன்னை மறுபடியும் உற்பத்தி செய்து கொள்ள வேண்டுமானால், மற்றெல்லாம் சாக வேண்டும். ஒவ்வொரு காலத்திலும் அவ்வாறே இருந்து வந்துள்ளது. 105. ஸ்தாபனங்கள் தேவனுடைய வார்த்தையின் ஒரு பாகத்தைச் சுமந்தன. ஆனால் வார்த்தையின் முழுமை, ஞானிகளாகிய சீர்திருத்தக்காரருக்கு மறைக்கப்பட்டு, கழுகின் காலம் தோன்றும் வரை முத்திரிக்கப்பட்டிருந்தது. அவ்வாறே வேதம் கூறுகின்றது. மல்கியா-4 நமக்கு இவ்விதம் வாக்களித்து உள்ளது. இந்த வெளிப்பாடு ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைக்கப்-பட்டிருந்தது. 106. அண்மையில் நாங்கள் வெளிப்படுத்தின விசேஷத்தின் மீது ஒரு போதனையை முடித்தோம், அதில் கூறப்பட்டுள்ள தூதர்களில் மூவரை அந்த மிருகங்களுக்கு ஒப்பிடலாம் என்பதை நாங்கள் அப்பொழுது அறிந்து கொண்டோம். அவை 'நீதிமானாக்கப்படுதல்', 'பரிசுத்தமாக்கப்படுதல்' என்பதாய் புறப்பட்டுச் சென்று, பெந்தெகொஸ்தே காலத்தையும் தங்களுக்குள் கொண்டு இருந்தன. ஆனால் நான்காம் மிருகமோ கழுகு. "அவைகளுடைய முகங்களின் சாயலாவது, வலது பக்கத்தில் நாலும் மனுஷமுகமும் சிங்கமுகமும், இடது பக்கத்தில் நாலும் எருது முகமும் கழுகு முகமுமாயிருந்தன.” எசே 1:10 கர்த்தர் அந்தந்த காலங்களில் அவைகளைத் தோன்றச் செய்தார். அவை ஒவ்வொரு காலத்திலும் சரிவர பொருந்தின. வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட கழுகு, மல்கியா 4-ம் அதிகாரத்தை நிறைவேற்றினது. 107. இயேசு மரியாளின் மூலம் உண்டானவரல்ல. ஜீவன் பதரின் வழியாக வருவது போன்று, அவர் மரியாளின் வழியாகத் தோன்றினார். 108. இன்றிரவு இங்கு வந்துள்ள கத்தோலிக்க சகோதரரும் சகோதரியுமாகிய நீங்கள், மரியாள் தேவனுடைய தாய் என்று எண்ணிக் கொண்டிருக்கின்றீர்கள். தேவனுக்கு தொடக்கமும் முடிவும் இல்லை என்னும் போது, அவள் எங்ஙனம் தேவனுடைய தாயாக இருக்கமுடியும்? அவள் தாயானால், தேவனுடைய தகப்பன் யார்? தேவன் அவளை சிருஷ்டித்தாரேயன்றி, அவள் அவரை சிருஷ்டிக்கவில்லை. அவர் மரியாளின் கருப்பையில் தன்னையே சிருஷ்டித்துக் கொண்டார். அது அவளுடைய சிருஷ்டிப்பு அல்ல. அவர், அவள் மூலமாய் உண்டானவரல்ல. அவளோ, அவர் மூலம் உண்டானவள் என்று வேதம் போதிக்கின்றது. "சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டான ஓன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை” (யோவான்-1:3). அவர் தேவனாயிருக்க, அவருக்கு எப்படி ஒரு தாய் இருக்க முடியும்? 109. எடுத்துக்காட்டாய் அமைந்திருப்பவர்களைக் குறித்த உண்மையான வெளிப் பாட்டை இங்கு நாம் காண்கிறோம். இயற்கை சந்ததியை சுமந்தவர் மூன்று ஸ்திரீகள். இது இயேசுவில் முதிர்வடைந்தது. இஸ்மவேல் வாக்குத்தத்தம் பண்ணப்பட்டவனாக இருக்க முடியாது. ஏனெனில் நாம் இக்காலத்தில் கூறுவது போன்று அவன் 'விவாகமின்றி பிறந்தவன்' (out of wedlock). அவன் அடிமையானவளின் புத்திரன். பின்பு இயேசுவைப் போல் சற்று அதிகம் காணப்படும் ஈசாக்கு பிறந்தான். அவனும் வாக்குத்தத்தம் பண்ணப்பட்டவன் அல்ல. ஏனெனில், ஆபிரகாமுக்கும் சாராளுக்கும் இடையே நேர்ந்த இன சேர்க்கையினால் அவன் பிறந்தான். மரியாள் கன்னிகை பிறப்பின் மூலம், மாமிசத்தில் வெளிப்பட்ட வார்த்தையாகிய தேவனை - இயேசுகிறிஸ்துவை - ஈன்றாள். 110. இங்கு மூன்று ஸ்திரீகள் அடையாளமாக இருக்கின்றனர். ஸ்திரீகள் சபைகளுக்கு எப்பொழுதுமே அடையாளமாக இருப்பவர்கள். எனவே இவர்கள், ஜீவனை தங்கள் வழியாக கடத்தின (carriers) ஸ்தாபனங்களின் காலங்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றனர், அவர்கள் எல்லோரும் மரித்து உலர்ந்து போக வேண்டும். வித்துக்கு இடம் கொடுக்க பதரும் உலந்து போக வேண்டும். பதர், தண்டு, இலைகள் இவையனைத்தும் உலர்ந்து போகாவிடில், வித்து முதிர்வடைய முடியாது. அவைகளுக்குள் இருந்த எல்லா சத்தும் உறிஞ்சப்பட வேண்டும். ஆமென்! 111. இப்பொழுது வித்து தோன்ற வேண்டிய காலம் - அதாவது மணவாட்டியின் காலம். பதர் செத்து உலர்ந்து விட்டது. 'கன்னிகை வார்த்தை தோன்ற வேண்டிய காலம் இது. அந்த 'கன்னிகை வார்த்தை' ஸ்தாபனங்களின் கரங்களில் கொடுக்கப்பட்டால், அது கன்னிகையாக இருக்க முடியாது. ஏனெனில், அது உங்களை அடைவதற்கு முன்பு கடுமையாகத் தாக்கப்படும் (man-handled). தேவனுடைய சபையோ ஸ்தாபனங்களால் தொடப்படுவதில்லை. அல்லேலூயா! அது நேற்றும் இன்றும் என்றும் மாறாத இயேசுகிறிஸ்துவை வெளிப்படுத்தும். அது கன்னிகை மூலம் தோன்றிய தேவனுடைய வார்த்தையாக இருக்கும். இது எவ்வளவு அற்புதமாயுள்ளது-! இதை நான் நேசிக்கிறேன். இது சத்தியம் என்பதை அறிவேன். இந்த வார்த்தை தொடப்பட முடியாது. கன்னிகையின் மூலம் வரும் மணவாட்டி ஸ்தாபனங்களால் தாக்கப்பட முடியாது. இல்லை ஐயா! ''ஆனபடியால், நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய் அசுத்தமானதைத் தொடாதிருங்கள். அப்பொழுது நான் உங்களை ஏற்றுக் கொள்வேன்,'' (2-கொரி-6:17-18) என்று தேவனிடமிருந்து அவள் கட்டளை பெற்று இருக்கிறாள். 112. அன்றொரு நாள் நான் பீனிக்ஸ்லிருந்து கார் ஓட்டிச் சென்று கொண்டு இருந்தபோது, தேவ ஆவியானவர் அங்கு அமர்ந்திருந்த பருந்தை (hawk) குறித்து என் கவனத்தை கவர்ந்தார். அந்த பருந்தின் செயல்களை நான் கூர்ந்து கவனித்தேன். இன்றுள்ள ஸ்தாபனத்திற்கு அது அடையாளமாயுள்ளது. 113. மூல சிருஷ்டிப்பில் தனக்களிப்பட்ட தன்மைகளை பருந்து தற்பொழுது இழந்து விட்டது. ஒரு காலத்தில் அது தனது மூத்த சகோதரனாகிய கழுகின் தன்மைகளைப் பெற்றிருந்தது. ஆனால் இப்பொழுது அது இரை தேட ஆகாயத்தில் பறப்பது கிடையாது. மாறாக அது மிருதுத்தன்மை வாய்ந்ததாய் உள்ளது, அது தொலைபேசி கம்பங்களில் உட்கார்ந்து கொண்டும், பூமியில் தாவித்தாவிச் சென்று, செத்த முயல்களைத் தேடித் தின்கின்றது. அதற்கென்று அது சிருஷ்டிக்கப்படவில்லை. அது கழுகைப் போலவே சிருஷ்டிக்கப்பட்டது. இன்றுள்ள ஸ்தாபனமும் அதே நிலையில் உள்ளது. அதுவும் கழுகைப் போல் சிருஷ்டிக்கப்பட்டது. அது உன்னதங்களில் தன் ஸ்தானத்தை வகிக்க வேண்டும், மாறாக அது மிருதுத்தன்மை பெற்று விட்டது. காணக் கூடாத உயரமான ஸ்தலத்திற்கு அது இப்பொழுது பறப்பதில்லை, இல்லை ஐயா. அது நவீன கல்வி முறைகளிலும், வேத சாஸ்திரத்திலும், மனிதனால் ஏற்படுத்தப் பட்ட ஸ்தாபனங்களின் கொள்கைகளிலும் சார்ந்துள்ளது. பாதி அழுகிப் போன செத்த முயல்களையே அது தேடித்திரிகின்றது, அது பூமியில் தாவிச் செல்கின்றது. அது எப்படி விழுந்து விட்டது பாருங்கள்! ஆனால் கழுகு சிறிது அளவும் மாறவில்லை. அது இன்னமும் கழுகாகவே உள்ளது. 114. பருந்து இப்பொழுது உயரே ஆகாயத்தில் பறந்து இரை தேடுவது கிடையாது. ஏற்கனவே செத்துப் போனவைகளின் பேரில் அது சார்ந்துள்ளது. பருந்து பூமியில் இறங்கவே கூடாது. ஆனால் இன்றைய பருந்தைக் கவனியுங்கள். நீங்கள் வீதிகளில் கார் ஓட்டிச் செல்லும் போது, தொலைபேசி கம்பிகள் நெடுக பருந்துகள் அமர்ந்திருந்து, அழுகிப் போன ஏதாவது கிடைக்குமா என்று கவனித்துக் கொண்டிருப்பதைக் காணலாம். பறப்பதற்கு சிறகுகள் இல்லாதது போன்ற நிலைக்கு அது வந்து விட்டது. தேவன் அதற்கு அளித்த பெலனை உபயோகிக்காததன் விளைவால், அது மிருதுவாகி பூமிக்கு வந்து விட்டது. 115. அதன் எண்ணம் அனைத்துமே செத்துப் போன முயல்களின் மீதும், வீதிகளில் கொல்லப்பட்ட மிருகங்களின்மேல் மாத்திரமே உள்ளது. 116. நவீன கல்வி முறைகளில் தங்கள் ஆகாரத்திற்காக சார்ந்திருக்கும் ஸ்தாபனத்திற்கு இந்த பருந்து உதாரணமாய் உள்ளது. அது செத்துப் போன ஆகாரம். அது லூத்தர், வெஸ்லி, பெந்தெகொஸ்தேயினர் இவர்களின் மூலம் அநேக ஆண்டுகளுக்கு முன்பே செத்து விட்டது. சபையானது இன்று தேவனுடைய வார்த்தை என்னும் ஆகாயத்தில் உயரப் பறப்பதற்கு பதிலாக, மனிதனால் ஏற்படுத்தப்பட்ட பிரமாணங்களுக்காக பின் நோக்கியுள்ளது. தேவனுடைய வார்த்தை என்னும் ஆகாயத்தில், விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும். ஆனால் அதுவோ பிணந்தின்னிகளின் பழக்கவழக்கங்களைக் கைக்கொண்டுள்ளது. நூதன கல்வியறிவு என்னும் அழுகிய பிணம், அவ்வுலகிலுள்ள பருந்துகளுக்காக வைக்கப்பட்டுள்ளது. அது, உலகிற்காக வைக்கப்பட்டுள்ளதே அல்லாமல், சபைக்காக அல்ல, ஆனால் சபையோ இன்று மிருதுத்தன்மை வாய்ந்ததாய் உள்ளது. முன்பிருந்த கரடுமுரடுத்தனம் (ruggedness) அதற்கு இப்பொழுது இல்லை. விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும் ஸ்தலமாகிய உன்னதங்களில் பறப்பதற்கு பதிலாக அது இங்கேயே இருந்து கொண்டு, "டாக்டர் இன்னார் இன்னார் இப்படி கூறியிருக்கிறார்” என்றும், "என் ஸ்தாபனம் அவ்விதம் நம்புவதில்லை” என்றும் கூறி வருகின்றது. ஓ, தேவனுடைய வாக்குத்தத்தங்களுக்கு பறந்து செல்லப் பயப்படும் நெறிதவறிய பருந்தே, "அற்புதங்களின் நாட்கள் முடிவடைந்து விட்டன” என்று நீ கூறுகின்றாய். 117. நீ மிருதுத் தன்மையைக் கொண்டிருக்கின்றாய். சிறகுகளையடித்து உயரப் பறந்து செல்ல நீ பயப்படுகின்றாய். ஜெபக் கூட்டங்களில் பங்குக் கொள்ள முடியாத அளவிற்கு நீ மிருதுவாகி விட்டாய். பீடத்தில் பத்து நிமிடங்கள் கூட உன்னால் செலவழிக்க முடியாத நிலைக்கு நீ வந்திருக்கின்றாய் அல்லவா? 118. நீ பருந்தைப் போல தாவிதாவிச் சென்று பூமியிலுள்ள அழுகிய பிணங்களின் இறைச்சியைத் தின்கின்றாயா? நீ வல்லூறைப் (vulture) போல் தாவிச் சென்று, அதன் இரையைத் தின்பதால், அதைப் போல் மாறி விட்டாய். பருந்து பறக்க வேண்டும்; தொலைபேசி கம்பங்களில் அமர்ந்து கொண்டு செத்த முயல்கள் கிடைக்குமா என்று பார்க்கக்கூடாது. வல்லூறைப் போன்று பூமியில் தாவிச் செல்வதற்காக அது படைக்கப்பட்டதல்ல. 119. சபை அது போன்ற நிலையை இன்று அடைந்துள்ளது. அவர்கள், "இங்கேயே செத்த முயல்கள் கிடைக்கும் போது, உயரப் பறந்து சென்று இரை தேடுவதனால் என்ன பயன்-?” என்கின்றனர். அவர்கள் மரித்தவர்களாய் இருக்கின்றனர். அவர்கள் அசுசிப்பட்டு விட்டனர். ஒரு காலத்தில் அவர்கள் இடம் நல்ல ஆகாரம் இருந்தது - லூத்தர், வெஸ்லி, பெந்தெகொஸ்தேயினர் போதகங்கள். அப்படியானால் வல்லூறைப் போன்று நீ ஏன் அழுகிய பிணங்களின் இறைச்சியை சாப்பிட வேண்டும்-? இஸ்ரவேல் புத்திரர் பயணப் பட்டு சென்ற போது, ஒவ்வொரு இரவும் புதிய மன்னா வானத்திலிருந்து விழுந்தது, அடுத்த நாள் மீதியாயிருந்த மன்னா புழுத்துப் போனது. "அதில் சிறு புழுக்கள் உண்டு” என்று நாம் கூறுவது வழக்கம், இன்றைய அனுபவத்தில் அதிகமான சிறு புழுக்களை நாம் காண்கிறோம். அநேக சமயங்களில் நமது மார்க்கம் மற்றவர்கள் கூறினதை அடிப்படையாகக் கொண்டு உள்ளது. "இது வேறொரு காலத்திற்கென்று அளிக்கப்பட்டது” என்று அவர்கள் கூறுகின்றனர். 120. அண்மையில் ஒரு பாப்டிஸ்டு போதகர் என்னிடம், "உங்களை சில காரியங்களில் நான் திருத்த விரும்புகிறேன்” என்று கூறினார். நான், "எவைகளை?” என்று கேட்டேன். அவர், “அப்போஸ்தலரின் காலம் முடிவடைந்து விட்ட பின்பும், இந்தக் காலத்தில் அப்போஸ்தலரின் போதனைகளை நீங்கள் உபதேசிக்க முயல்கிறீரே-!” என்றார். 121. “அது எப்பொழுது தொடங்கினது என்று நான் சொல்கிறேன். அது எப்பொழுது முடிவு அடைந்தது என்று நீங்கள் எனக்குக் கூறவேண்டும். தேவனுடைய வார்த்தையை நீங்கள் விசுவாசிக்கின்றீர்கள்-?” என்றேன். அவர், “ஆம்” என்றார். 122. "சரி, அப்படியானால் அப்போஸ்தலரின் காலம் பெந்தெகொஸ்தே நாளன்று தொடங்கினது என்பதை நம்புகின்றீர்களா?” என்று கேட்டேன். அவர், “ஆம்” என்று விடையளித்தார். 123. நான், "வெளிப்படுத்தல்-2218-19 வசனங்களில்: ஒருவன் இவைளோடே எதையாகிலும் கூட்டினால், இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற வாதைகளை தேவன் அவன் மேல் கூட்டுவார். ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப் போட்டால், ஜீவ புஸ்தகத்தில் இருந்தும், பரிசுத்த-நகரத்திலிருந்தும், இந்த புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளில் இருந்தும் அவனுடைய பங்கை தேவன் எடுத்துப் போடுவார் என்று இயேசு கூறியுள்ளது நினைவிருக்கட்டும். அது போதகரையும், ஜீவபுஸ்தகத்தில் பெயரெழுதப்பட்டுள்ள எவரையும் உட்படுத்துகின்றது. பேதுரு அப்போஸ்தலன்: "நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவ மன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள்.'' அப்பொழுது பரிசுத்தாவியின் வரத்தைப் பெறுவீர்கள், வாக்குத்தத்தமானது உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும் நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருகிறது (அப்-2:38-39) என்று கூறினானல்லவா? அப்படியானால் அப்போஸ்தலரின் காலம் எப்பொழுது முடிவு பெற்றது?” என்று கேட்டேன். அது முடிவு பெறவில்லை. ஒரு கூட்டம் பருந்துகள் வல்லூறுகளாகி, முன் காலத்தவர் கொன்று போட்ட ஏதோ ஒரு மிருகத்தின் பிணத்தைச் சுற்றி வந்து, அதை இரையாகத் தின்று கொண்டிருக்கின்றன. வானத்திலிருந்து புதிய மன்னா இப்பொழுது அவர்களுக்குக் கிடைப்பதில்லை. அவர்களுக்கு அது அவசியமுமில்லை. ஏனெனில் முதலாவதாக, அவர்கள் கழுகுகள் அல்ல. 124. கல்வியையும், மனிதனால் நிர்ணயிக்கப்பட்ட வேத சாஸ்திரங்களையும் சார்ந்து, அவைகளுக்கு விளக்கம் அளிக்க முனையும் நமது நவீன ஸ்தாபனங்கள் அதே நிலையில் உள்ளன. அவர்கள், "இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்” என்னும் தேவனுடைய வார்த்தையை ஏற்க மறுக்கின்றனர். அவர்கள் மல்கியா 4-ம் அதிகாரத்தையும், இக்காலத்திற்கென அளிக்கப்பட்டுள்ள தேவனுடைய வாக்குத்தத்தங்களையும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். சகரியா-14:7-ல் தீர்க்கதரிசி, "ஒரு நாள் உண்டு, அது கர்த்தருக்குத் தெரிந்தது; அது பகலுமல்ல இரவுமல்ல; ஆனாலும் சாயங்காலத்திலே வெளிச்சம் உண்டாகும்” என்று கூறியுள்ளதையும் கூட அவர்கள் ஏற்கமாட்டனர். நூறு ஆண்டுகளுக்கு முன்பு ஏதோ ஒரு பெந்தெகொஸ்தே ஸ்தாபனம் கொன்று போட்டதை சுற்றி சுற்றி வரவே அவர்கள் விரும்புகின்றனர். பாதி புழுத்த மன்னாவை அவர்கள் புசிக்கின்றனர். 125. சபையானது மாமிசப்பிரகாரமாய் இருப்பதால், உலகிலுள்ள செத்த மிருகங்களின் மாமிசத்தையும், சபை அரசியலையுமே அது பருந்துகள் போல தின்று கொண்டிருக்கிறது. ஒரு மனிதனை பரிசுத்த ஆவியானவர் அவர்கள் சபைக்கு அனுப்ப அவர்கள் அனுமதிக்க மாட்டனர், அந்த ஸ்தாபனங்கள் அவரை ஏற்றுக்கொள்ளுமா இல்லையா என்பதை அறிந்து கொள்ள அவர்கள் அரசியலில் ஈடுபடுவார்கள். அவர்கள் உலகப் போக்கையே கடைப் பிடிக்கின்றனர். உலகத்தாரைப் போல் அவர்கள் ஆடையணிந்தும், பார்வைக்கு அவர்கள் போல் காட்சி அளித்து, அவர்களுடைய நடத்தையையே பின் பற்றுகின்றனர். அவர்கள் பருந்துகள், அவர்கள் ஒப்புரவாகும் சோம்பேறிகள். கழுகு தன் போக்கை விட்டுக் கொடுத்து ஒப்புரவாவதை நீங்கள் கண்டது உண்டா? இல்லை ஐயா. அது ஒரு போதும் ஒப்புரவாகாது. அவ்வாறே ஒரு உண்மையான கிறிஸ்தவனும் தன் போக்கை விட்டுக் கொடுத்து ஒப்புரவாக மாட்டான். அவன் மிருதுவான குணம் படைத்தவனல்ல. தன் இரையைக் கண்டு பிடிக்குமளவும் அவன் தேடிக் கொண்டேயிருப்பான். அவனுக்கு புதிய மன்னர் தான் அவசியம். அவன் உயர உயர பறந்துச் செல்வான். இரை பள்ளத்தாக்கில் இராவிடில் அவன் அதை காட்டிலும் சற்று உயர பறப்பான். உயரச் செல்ல செல்ல, நீங்கள் மிக நன்றாக காணமுடியும். இயேசு வரப் போகிறார் என்னும் விசுவாசத்துடன் இக்காலத்து கழுகுகள் உயரப் பறப்பதற்கு சமயம் வந்து விட்டது. அநேக ஆண்டுகட்கு முன்பு கொல்லப்பட்ட மிருகத்தின் மாமிசத்தைக் கொண்டு வாழத் தலைப்படாதீர்கள். 126. சபை அரசியலால் நிறைந்துள்ளது. அங்கு வாக்கு சீட்டுகளைப் போட்டு ஒருவரை தேர்ந்தெடுப்பதும், மற்றொருவரை வெளியே தள்ளுவதுமாக உள்ளது. அவர்கள் இதையும் அதையும் கூறிக் கொண்டேயிருக்கின்றனர். பரிசுத்த ஆவியானவருக்கு அவர்கள் சபைக்குள் நுழைய உரிமையில்லை. அவர்கள் ஜெபக் கூட்டங்கள் நடத்துவதில்லை. தேவனுடைய வார்த்தையை நிறைவேற்ற அவர்கள் துயரங்கொண்டு, மனஸ்தாபப்பட்டு, தேவனுடன் ஒப்புரவாவதில்லை. தேவனுடைய வார்த்தை நேற்றும் இன்றும் என்றும் மாறாததாயிருக்கிறது என்பதை அவர்கள் இப்பொழுது நம்புவது கிடையாது. அவர்கள் வல்லூறுகளைப் போல் ஸ்தாபனங்களில் தங்கி, ஸ்தாபன புத்தகத்தில் தங்கள் பெயர்களைப் பதிவு செய்து கொள்கின்றனர். 127. அவர்கள் சோம்பேறிகளாகவும் மிருதுத்தன்மை வாய்ந்தவர்களாகவும் இருந்து, செத்த மிருகத்தின் மாமிசத்தை தின்னும் பெருந்திண்டிகளாக வாழ்ந்து, மனிதனால் ஏற்படுத்தப்பட்ட பாதி அழுகின வேத சாஸ்திரத்திலும், வேத பள்ளியில் கல்வி கற்பிப்பவர் யாரோ ஒருவர் அனேக ஆண்டுகட்கு முன்பு கொன்று தயாரித்த 'ஞாயிறு பள்ளி நிகழ்ச்சி நிரல்,' இலக்கியத்தின் பேரிலும் சார்ந்துள்ளனர். அந்த இலக்கியம், 'அற்புதங்களின் நாட்கள் முடிவடைந்து விட்டன,' என்றும்; 'பரிசுத்தாவியின் அபிஷேகம் என்பது கிடையாது,' என்றும் போதிக்கின்றது. கழுகு அதை தின்னும் என்று நினைக்கின்றீர்களா? இல்லவே இல்லை, இல்லை ஐயா. ஒரு உண்மையான கிறிஸ்தவன் ஸ்தாபனங்களின் பழைய போதகங்களான செத்த மிருகத்தின் மாமிசத்தை ஒருக்காலும் புசிக்கமாட்டான். 128. லூத்தரின் காலத்தில் கர்த்தர் முயல்களைத் தருவதாக வாக்களித்தார். தொடர்ந்து வந்த காலங்களில், வெவ்வேறு காரியங்களை அவர் வாக்கு இளித்தார். ஆனால் இக்காலத்தில் அவர் ஏழு பதார்த்தங்களைக்கொண்ட ஒரு முழு விருந்தை நமக்கு வாக்குத்தத்தம் செய்துள்ளார். ஏனெனில் ஏழு முத்திரைகள் திறக்கப்பட்டு விட்டன. விசுவாசிப்பவர்களுக்கு தேவனுடைய வார்த்தையிலிருந்து புசிப்பதற்கு எல்லாமே ஆயத்தமாயுள்ளது. 129. பருந்துகள் பிணந்தின்னிகளைப் போல் தாவி வருகின்றன. ஓ, அதை சிந்தித்துப் பாருங்கள். இந்நேரம் எவ்வளவு முக்கியம் வாய்ந்தது! பருந்து அநேக ஆண்டுகளுக்கு முன்னர் எவ்வாறு தனக்குரிய தன்மையை இழந்து விட்டதோ, அது போன்று சபையும் அநேக ஆண்டுகட்கு முன்பே தன் தன்மையை இழந்து விட்டது. தன் சகோதரி பறவையாகிய கழுகை; தேவனுடைய தீர்க்கதரிசியை - அது விட்ட மாத்திரத்தில் அதன் தன்மைகளை அது இழந்து விட்டது. முதலில் சபை உண்மையான வார்த்தையாகிய 'நீதிமானாக்கப்படுதலை' சுமந்தது, பின்பு அது 'பரிசுத்தமாக்கப்படுதலை' அதனுள் பாயச் செய்தது. பின்னர் அது பரிசுத்தாவியின் அபிஷேகத்தையும், வரங்கள் புதுப்பிக்கப் படுதலையும் அதனுள் பாயச் செய்தது. ஆனால், இப்பொழுது அது பின் சென்று, வேறொரு காலத்துக்குரிய மன்னாவைத் தின்பதற்கு முயல்கிறது. அந்த மன்னா அழுகிப் போய், புசிப்பதற்கு ஏற்றதாக இல்லை. இக்காலத்தில் உள்ள உண்மையான கழுகு, அந்த மன்னா அது அளிக்கப்பட்ட காலத்தில் புசிப்பதற்கு ஏற்றதாக இருந்ததென்றும், இக்காலத்தில் நாம் அவை எல்லாவற்றையும், அதனுடன் கூட வேறு சிலவற்றையும் பெற்றுக் கொண்டு இருக்கிறோம் என்பதையும் அறிந்திருக்கும். தேவன் வாக்குத்தத்தம் செய்த படியே, இக்கடைசி நாட்களில் இயேசு கிறிஸ்து தமது முழு வல்லமையுடன் வெளிப்பட்டார். 130. ஸ்தாபனம் இப்பொழுது உலர்ந்த பதராக உள்ளது. அவர்களுக்கு எல்லாம் முடிந்து விட்டது. பரிசுத்தாவியானவர் அவர்கள் வழியாய் கடந்து சென்றார். அவர்கள் உறுதிப்படுத்தப்பட்ட வித்தாகிய வார்த்தையுடன் (vindicated Seed Word) சுதந்தரவாளியாயிருப்பதில்லை. அவள் நிச்சயம் இருக்கவே முடியாது. அவள் எடுத்துக்கொள்ளப்படுதலில் பங்கு கொள்வதில்லை, அவர்கள் ஸ்தாபனத்தின் அங்கத்தினராக இருந்து கொண்டு, 2-ம் உயிர்த்தெழுதலில் உயிரோடெழுந்து, அவர்கள் கேட்ட சத்தியத்தின் அடிப்படையில் நியாந்தீர்க்கப்படுவார்கள். இங்குள்ளவர்கள் யாராவது ஸ்தாபனத்தின் அங்கத்தினராக மாத்திரம் இருந்தால், நீங்கள் சத்தியத்தைக் கேட்டிருக்கின்றீர்கள் என்று நியாயத்தீர்ப்பு நாளன்று சாட்சி சொல்ல வேண்டுமே-! அப்படியானால் உங்களுக்கு அளிக்கப்படும் நியாந்தீர்ப்பு என்னமாயிருக்கும்-! தேவனுடைய நித்தியமான வார்த்தையின் வாக்குத்தத்தங்களும் வல்லமைகளும், விசுவாசிகளுக்குக் கிடைக்கப்பெறும் நீல-வானத்தில் அவள் இப்பொழுது பறப்பது கிடையாது. அவைகளின் பேரில் அவளுக்கு நம்பிக்கையில்லை. அவள் தொலைபேசி கம்பிகளின் மேல் அமர்ந்து கொண்டு, "என் ஸ்தாபனம் முயல்கள் போதும் என்கிறது” என்று கூறுகின்றது. "அவைகளுக்குள் புழுக்கள் இருந்தாலும் பரவாயில்லை ” என்று கூறி வருகின்றது. 131. பெந்தெகோஸ்தேயினரும், அவளுடைய சகோதரி வல்லூறுகளைப் போன்று, தேவனற்றவர்கள் அடங்கிய மாநாடுகளில் பங்கு கொண்டு, ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு கொல்லப்பட்ட முயல்களை அவர்களுடைய அரசியல் தலைவன் ஆகாரமாக அளிக்க, அதை தின்று வருகின்றனர். இன்றைய பெந்தெகோஸ்தே சபையின் நிலை அவ்வாறே உள்ளது. 132. ஓ, தேவன் அளித்த வாக்குத்தத்தத்தை சாராள், ஆகாரின் மூலம் நிறைவேற்ற முயன்றது போன்று, இன்றைய சபையும் எழுப்புதலை உண்டாக்க முயற்சி செய்கின்றது. நமது நாட்டிலுள்ள சுவிஷேசகர்கள் "நமது காலத்தில் எழுப்புதல்” என்று கூக்குரலிடுகின்றனர். மெதோடிஸ்டுகள், பாப்டிஸ்டுகள், பெந்தேகொஸ்தேயினரான நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இருக்கின்றீர்கள். வல்லூறுகளைப் போல நீங்கள் செத்தவைகளை இரையாகத் தின்று கொண்டிருக்கும் போது, உங்கள் மத்தியில் புதிய மன்னாவாகிய எழுப்புதல் எங்ஙனம் உண்டாகும்? எழுப்புதல் அப்படி உண்டானாலும், யாரும் கண்டு கொள்ளக்கூடாத அளவிற்கு அது அவ்வளவு சிறியதாய் இருக்கும். 133. பெந்தெகோஸ்தேயினர், "ஓ, மகத்தான ஒன்று நிகழவிருக்கின்றது” என்கின்றனர். ஆம், உண்மையில் அது நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது, ஆனால் அவர்களோ அதை அடையாளம் கண்டு கொள்ளமுடியவில்லை (It's happening, and they don't know it). "பிணம் எங்கேயோ அங்கே கழுகுகள் வந்து கூடும்.” (மத்-24:28) பிணம் என்றால் என்ன? அது தேவனுடைய வார்த்தை, அவரே வார்த்தை. பிணம் கிறிஸ்துவைக் குறிக்கிறது. நேற்றும் இன்றும் என்றும் மாறாத இயேசு கிறிஸ்து உனக்குள் வாசம் செய்தல். (இங்கு "பிணம்” எனப்படுவது, கழுகு ஒரு மிருகத்தைக் கொன்று புதிய, அழுகிப் போகாத மாமிசத்தைப் புசிப்பதையே குறிக்கின்றது - மொழிப்பெயர்ப்பாளர்). 134. தேவனுடைய வாக்குத்தத்தம் நிறைவேற வேண்டுமென்று சாராள் எவ்விதம் முயன்றாளோ, அது போன்று இன்று உள்ள சபையும், "நமது காலத்தில் எழுப்புதல்” என்பதற்காக வெகுவாக முயன்று வருகிறது. ஆனால் சிதைக்கப்பட்ட வாக்குத்தத்தத்தின் மூலம் அவர்கள் எழுப்புதலைக் கொண்டு வரமுயற்சி செய்கின்றனர். கர்த்தர் ஒரு ஸ்தாபனத்தை ஒரு போதும் ஆசீர்வதித்ததேயில்லை. அப்படியிருக்க, அவர்கள் எங்ஙனம் இதை சாதிக்க முடியும்? ஒரு ஸ்தாபனத்தை கர்த்தர் இதற்காக உபயோகித்ததேயில்லை. ஒரு செய்தி புறப்பட்டுச் சென்று, பின்பு அது ஸ்தாபனமாகும் போது, அது அங்கேயே மரித்து விடுகின்றது. அப்படிப்பட்ட ஸ்தாபனம் மறுபடியும் உயிர் பெற்றது என்பதை சரித்திரக்காரர்கள் நிரூபிக்கட்டும் பார்க்கலாம்! அந்த செய்தி மரித்து, அங்கேயே தங்கி விடுகிறது. ஆனால் தேவனோ, சுமப்பவைகளின் வழியாக அங்கிருந்து வேறொன்றுக்குள் சென்றுவிடுகின்றார். அப்படித்தான் அவர் லூத்தரன்களை விட்டு மெதோடிஸ்டுகளுக்குள் சென்றார். பின்பு மெதோடிஸ்டுகளை விட்டு அவர் பெந்தெகோஸ்தேயினருக்குள் சென்றார். 135. இப்பொழுது அவர் பெந்தேகோஸ்தேயினரையும் விட்டகன்று வித்துக்குள் சென்றுவிட்டார். ஏனெனில் வித்து உண்டாக வேண்டும். நீங்கள் இயற்கையை மேற்கொள்ள முடியாது. இப்பொழுது வித்து மாத்திரமே உண்டாக வேண்டும். அந்த வித்து தன்னைத் தான் உற்பத்தி செய்து கொள்ளும். அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் - அன்று தோன்றின அதே அக்கினி ஸ்தம்பம் இன்று அதே அடையாளங்களையும் வல்லமையையும் நடப்பித்து, அதே தேவன், அதே விதத்தில், வேதத்திலுள்ள வார்த்தையை உறுதிப்படுத்திக் கொண்டு வருகிறார். இன்றிரவு அவர் நம்மை நடத்துகின்றார். அதை நாம் கண்டு விசுவாசிப்பதற்கு கர்த்தர் உதவி செய்வாராக! 136. சபைக்கு அடையாளமாயுள்ள சாராள் ஆகாரைத் தெரிந்து கொண்டாள். ஆனால் அது நடக்கவில்லை. அப்படித்தானே? ஆம், அவ்வாறு மனிதனால் தெரிந்துகொள்ளப்பட்ட குழுக்கள் கிரியை செய்ய முடியாது. அவர்கள் டாக்டர் பட்டங்கள் பெற்றிருந்தாலும், அது உதவாது. சுமப்பவர்கள் (carriers) அனைவரும் தவறிப்போயினர். ஆகார் தவறினாள். அவள் என்ன செய்தாள்? அவளுடைய ஒரே குமாரனை வளர்ப்பதற்காக வேறொருவளிடம் ஒப்பிவித்தாள். லூத்தரும் அதையே செய்தார். தனது குமாரனாகிய 'நீதிமானாக்கப்படுதல்' என்பதை வளர்ப்பதற்காக அவர் ஒரு ஸ்தாபனத்திடம் அதை ஒப்புவித்தார். 137. சாராளைப் போன்று வெஸ்லியும் தவறினார். சாராள் இயற்கைக்கு மேம்பட்ட பிறப்பில்; பரிசுத்தாவியின் அபிஷேகத்திற்கு அது ஓர் எடுத்துக் காட்டு; நம்பிக்கை கொள்ளவில்லை என்பதை, ஆபிரகாம் மரத்தினடியில் இருந்த போது அவளைக் காண வந்தவர்களிடம் தன் ஏளன சிரிப்பினால் நிரூபித்தாள். வெஸ்லியைப் பின்பற்றினவர்களிடையே, பெந்தெகொஸ்தே காலம் தோன்றி, அன்னிய பாஷை பேசுதல், அற்புதங்கள் போன்றவை அறிமுகமான போது, அவர்கள் ஏளனம் செய்தனர். 'கிறிஸ்துவின் சபையென (Church of Christ) உங்களை அழைத்துக் கொள்பவர்களே, பாப்டிஸ்டுகளே, பிரஸ்பிடேரியன்களே, நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் முகத்தைத் திருப்பிக் கொண்டு அகன்று சென்று விட்டீர்கள், நான் கூறுவது உண்மை. வெஸ்லியன்களே! நீங்கள் என்ன செய்தீர்கள்? உங்கள் குழந்தையை ஒரு ஸ்தாபனத்திற்கு விற்றுப் போட்டீர்கள். அது அங்கு மரித்து நிர்மூலமானது. 138. ஆனால் உண்மையான வார்த்தையோ நகர்ந்து சென்றது. அது ஸ்தாபனத்திலேயே தங்கி விடவில்லை. அது பெந்தெகொஸ்தேயினுள் சென்றது. அச்சமயம் அது நன்றாக வளர்ந்த குமாரனாக இருந்தது. கருப்பையினுள் இருக்கும் குழந்தையைப் போன்று அது முதுகெலும்பில் தொடங்கி, சுவாசப்பைகள் தோன்றி, பின்பு தலையும் கால்களும் வளர்ந்தன. பின்னர் அது முழு வளர்ச்சி அடைந்து, குழந்தையாக வெளி வந்தது. அது போன்றே சபையும் வளர்ந்தது. 139. சாராளைப் போல் வெஸ்லியும் இயற்கைக்கு மேம்பட்ட அற்புதங்களில் சந்தேகம் கொண்டார். ஏலோகிம் தேவனே, மனிதனைப் போன்று உடை அணிந்து, உடையில் தூசு படிந்தவராய், ஆபிரகாமுக்கு வாக்குத்தத்தத்தை அளித்தார். அப்பொழுது சாராளுக்கு 90-வயது. ஆபிரகாமுக்கு 100-வயது. சாராள் நகைத்து, "இது எப்படியாகும்? ஆபிரகாமும் நானும் வாலிபர் அல்லவே! நாங்கள் தொடர்பு கொண்டு 20-ஆண்டுகளுக்கு மேலாகின்றது. என் ஆண்டவன் உடன் எனக்கு இன்பம் உண்டாயிருக்குமோ? நான் முதியவள், அவரும் வயோதிபர். அவருடைய ஜீவ ஓட்டம் செத்து விட்டது, எனது கருப்பையும் உலர்ந்து விட்டது, என் மார்பகங்களும் சுருங்கி விட்டது, பால் சுரப்பிகள் உலர்ந்து போயிற்று. பின்னே எப்படி எனக்கு குழந்தை பிறக்கும்-?” என்றாள். 140. ஆனால் தேவனோ அவளுக்கு குழந்தை பிறக்குமென்று வாக்கு அளித்து இருந்தார். எனவே அது எப்படியாயினும் பிறக்கவேண்டும். 141. வெஸ்லியும் சாராளைப் போன்றே நடந்து கொண்டார். மெதோடிஸ்டுகள், "அன்னிய பாஷை, தெய்வீக சுகமளித்தல் இவைகளை நாங்கள் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? அது இக்காலத்துக்குரியதல்ல” என்றனர். 142. ஆனால் ஆண்டவர், "கடைசி நாட்களில் மாம்சமான யாவர் மேலும் என் ஆவியை ஊற்றுவேன் என்று வாக்களித்திருக்கிறேன்” என்றார். அவர் வாக்களித்ததை அப்படியே நிறைவேற்றினார். ஆனால் வெஸ்லியின் சபையும் அவளைச் சேர்ந்த மற்ற மகரந்தப்பொடி சகோதரிகளாகிய பாப்டிஸ்டுகள், பிரஸ்பிடேரியங்கள், கிறிஸ்துவின் சபை, நசரேயன்கள், யாத்திரிக பரிசுத்தர், ஐக்கிய சகோதரர் என்பவர் அனைவரும் அங்கேயே மரித்தனர். ஆனால் சபையோ அங்கிருந்து நகர்ந்து சென்றுவிட்டது. பெந்தெகோஸ்தேயினர் என்ன செய்தனர்? பதரைப் போன்று அவர்கள் தங்களுக்கு ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்டனர். 143. மரியாள் பெந்தெகோஸ்தேயினருக்கு அடையாளமாயிருக்கிறாள். ஒரு சமயம் அவள் மகன் காணாமற் போனார். அவரை எங்கு தேடியும் கண்டு பிடிக்கமுடியவில்லை. மூன்று நாள் பயணத்துக்குப் பிறகு அவள் வந்த வழியே திரும்பவும் சென்று அவரைக் கண்டு பிடிக்க வேண்டியதாயிருந்தது. இன்றுள்ள சபையிலிருந்து அது ஐந்து மடங்கு அதிக தூரமாயிருந்தது; சுமார் 50 அல்லது 75 வருடங்கள். (She had left Him. Like the modern church today, about three times five, or twentyfive, has the church left, about fifty years ago, or seventy-five) 144. மரியாளும் யோசேப்பும் அவரைத் தேடிக் கொண்டே வந்த வழியே திரும்பச்சென்றனர். அவர் தேவாலயத்தில் போதகர்கள் நடுவில் தேவனுடைய வார்த்தையைக் குறித்து தர்க்கம் செய்து கொண்டிருந்ததை அவள் கண்டாள். அப்பொழுது மரியாள், "உன் தகப்பனும் நானும் விசாரத்தோடே உன்னைத் தேடினோமே” என்றாள். மரியாள் "உன் தகப்பனும் (father) நானும்...” என்று கூறுவதைக் கவனியுங்கள். அதன் மூலம் யோசேப்பே இயேசுவின் தகப்பன் என்று அவள் குறிப்பிட்டு இயற்கைக்கு மேம்பட்ட அவருடைய பிறப்பை மறுதலித்தாள். அவள் செய்யத்தகாததை அங்கு செய்தாள். ஆனால் கத்தோலிக்கராகிய நீங்கள் அவளை "தேவனுடைய தாயார்” என்று அழைக்கின்றீர்கள். ஒரு தாய்க்கு அவளுடைய மகனைக் காட்டிலும் அதிக ஞானம் இருக்க வேண்டும்-!. இன்றைய பெந்தெகோஸ்தே சபை செய்வது போன்று உள்ளது இது. அவர்கள் வார்த்தையின் பிறப்பை மறுதலிக்கின்றனர். அவர்கள் பெறும்பான்மையான வார்த்தையை ஏற்றுக் கொள்கின்றனர். ஆனால் முழு வார்த்தையையும் அவர்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். மரியாளைப் போன்று அவர்களும் வார்த்தையின் பிறப்பை மறுதலிக்கின்றனர். 145. இதற்கு பின்பு வேறொரு ஸ்தாபனம் இருக்க முடியாது என்பது நினைவு இருக்கட்டும். இயேசுவுக்கு (Word Itself - வார்த்தையானது) 12 வயதாகியிருந்த போதிலும்; பதரில் ஒரு சிறு உருவமாக மறைந்து கொண்டிருந்த போதிலும்; அந்த வார்த்தையின் தன்மையைக் கவனியுங்கள்! இயேசு, "என் பிதாவுக்கு அடுத்தவைகளில் நான் இருக்க வேண்டியதென்று அறியீர்களா-?” என்று பதிலளித்தார். (The Word corrected the church, right there - அங்கே தான் சரியாக வார்த்தையானது சபையை திருத்தினது). 146 “இதையெல்லாம் எதற்காகச் செய்கிறீர்கள்? உங்களால் இதைச் செய்ய முடியாது என்பது உங்களுக்குத் தெரியும். நாங்கள் எங்கள் கதவுகளை மூடுவோம்; உங்களை உள்ளே வர விடமாட்டோம்." 147 "நான் என் தந்தையின் வேலையில் இருக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியாதா?" பாருங்கள்-? நிச்சயமாக, நிச்சயமாக, உண்மையான இயற்கைக்கு அப்பாற்பட்டது! 148. மரியாள் அப்பொழுது தான், அவர் ஒரு சாதாரண மனிதன்; யோசேப்பின் குமாரன்; என்று கூறினாள். பெந்தேகோஸ்தேயினர் செய்வது போன்றுள்ளது இது. அவர்கள் அவரை மூவரில் ஒருவராகக் கருதுகின்றனர். இது உங்களைப் புண்படுத்தும் என்பதையறிவேன்! ஆனால் அவரோ, "மூன்றும் ஒன்றாக” இருந்தார். பெந்தேகோஸ்தேயினர், "அவர் பரிசுத்த ஆவியின், பிதாவின் குமாரன்” என்கின்றனர். தேவனுடைய உண்மையான வார்த்தை, அவர்கள் மூவரல்ல, ஒருவர் மாத்திரமே இருக்கிறார் என்று வெளிப்படையாய் கூறுகின்றது. நீங்கள் தேவனுடைய வார்த்தையை அறியாமலிருக்கின்றீர்கள்! . 149. கவனியுங்கள், பதருக்குப் பின்பு வேறு சுமப்பவைகள் (carriers), தாய் சபைகள் அல்லது ஸ்தாபனங்கள் தோன்ற முடியாது. 150. ஏனெனில் இந்த கட்டத்திற்கு பிறகு கோதுமை மணி உற்பத்தியாக வேண்டுமேயன்றி வேறொன்றும் இருக்க முடியாது. அந்த தானியம் பூமிக்கடியில் புதைந்த கோதுமை மணியாகிய; நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராகிய; இயேசுகிறிஸ்துவைப் போன்றே இருக்க வேண்டும். இயேசு செய்த அதே கிரியைகளை மணவாட்டி செய்ய வேண்டுமெனக் கருதி ஆவியானவர் அவள் மேல் இறங்குகிறார். பாருங்கள். அதே கோதுமை மணியை அது உற்பத்தி செய்கின்றது. 151. சிறுவனாயிருந்த போதிலும், வார்த்தையாகிய இயேசுகிறிஸ்து தனக்காகப் பேசி, "என் பிதாவுக்கடுத்தவைகளில் நான் இருக்கவேண்டியதென்று அறியீர்களா-?” என்று உரைத்தார். 152. இச்செய்தியில் ஒரு இரகசியம் அடங்கியுள்ளது; பிதாவுக்கடுத்தவைகள் (ஆங்கிலத்தில் 'Father's business” என்று எழுதப்பட்டுள்ளது. அது 'பிதாவின் பணி' அல்லது 'பிதாவின் பொறுப்பு' என்று பொருள்படும்-மொழிபெயர்ப்பாளர்). 'பிதாவுக்கடுத்தவைகள்' என்றால் என்ன? பிதா அவருக்காக என்னென்ன பணி செய்தார் என்பதைக் காண முடிகின்றதா-? "ஒரு கன்னிகை கர்ப்பவதியாவாள்” (ஏசா-7:14) என்று ஏசாயா கூறியுள்ளதை அவர் நிறைவேற்றினார். மேலும் ஏசாயா, "அப்பொழுது முடவன் மானைப் போல் குதிப்பான்; ஊமையான நாவும் கெம்பீரிக்கும்” (ஏசா 35:6) என்று தீர்க்கதரிசனம் உரைத்துள்ளான். இவை அனைத்தும் நிறைவேறும் என்று ஏசாயா முன்னறிவித்தான். மோசே, இயேசுவைக் குறித்து, "உன் தேவனாகிய கர்த்தர் என்னைப் போல ஒரு தீர்க்கதரிசியை உனக்காக உன் நடுவே உன் சகோதரரிலிருந்து எழும்பப் பண்ணுவார்; அவருக்குச் செவி கொடுப்பீர்களாக” (உப 18:15) என்று கூறியிருந்தான். இந்த வார்த்தையை நிறைவேற்ற வேண்டியது பிதாவின் பணியாகும். இயற்கையான பெண்களின் மூலம் தோன்றினதே அவ்வாறு இருக்கும் போது, ஆவிக்குரிய ஸ்திரீகளாகிய சபைகளின் மூலம் தோன்றினது எப்படி இருக்க வேண்டும்! நமக்கு அது எவ்விதம் பொருந்தும்-? உற்பத்தியான கோதுமை மணி, "நாங்கள் பிதாவுக்கடுத்தவைகளில் இருக்க வேண்டும்” என்று கூக்குரலிட்டு, மல்கியா 4-ம் அதிகாரம் சரியென நிரூபித்து, லூக்கா-17:30 சரியென நிரூபித்து, எபிரெயர்-13:8 சரியென நிரூபித்து, யோவான்-14:12 சரியென நிரூபித்து, தேவனுடைய எல்லா வார்த்தையும் சரியென நிரூபிக்கும். பிதாவின் பணி என்னவென்று வெளிப்படுத்தல் 10-ம் அதிகாரத்தில் கூறப்பட்டு உள்ளது. அது '7-முத்திரைகளைத் திறக்குதல்', தேவ ரகசியமாகிய 'சர்ப்பத்தின் வித்து', 'விவாகமும்-விவாகரத்தும்? போன்ற இரகசியங்களை வெளிப்படுத்துதல் போன்றவை ஆகும். இந்த இரகசியங்கள் அனேக ஆண்டுகளாக வேத பண்டிதர்க்கு மறைவாயிருந்தன. ஆனால், இந்த நாட்களில் அவை வெளிப்பட வேண்டும், அது தான் பிதாவின் பணியாகும். இவைகளை சபை ஏற்றுக் கொள்ளும் என்று நினைக்கின்றீர்களா? அவர்கள் கெளரவம் வாய்ந்தவர்களாய், "எங்கள் ஸ்தாபனம் அதை போதிப்பதில்லை” என்கின்றனர். ஆனால் வேதம் இவைகளைப் போதிக்கின்றது. அவை உண்மை என்று தேவன் நிரூபித்திருக்கிறார். 153. அந்த ஏழு முத்திரைகளும், ஸ்தாபனங்களானது சுமக்கும் கருவிகளாக மாத்திரமே அமைந்திருந்தன என்பதை இந்நாட்களில் நமக்கு நிரூபிக்கின்றன. மற்றொரு காரியத்தையும் வெளிப்படுத்துவது பிதாவின் பணியாயுள்ளது. அதாவது ஸ்தாபனங்கள் அவருடையவைகள் அல்ல என்றும், அவை தேவனுடைய வார்த்தையை மறுதலிக்கும் மனிதரால் ஏற்படுத்தப்பட்டவை என்றும் வெளிப்படுத்துவது பிதாவின் பணியாகும். 154. கவனியுங்கள், கன்னிகையாகிய மரியாள் சிலுவையண்டை நின்று கொண்டிருந்த போது இயேசு அவளை, 'தாய்' என்று அழைக்கவில்லை. அவளை 'ஸ்திரீயே' என்று அழைத்தார். அவளை “சுமப்பவள்' என்று அவர் அழைத்தாரேயன்றி, 'தாய்' என்று அழைக்கவில்லை. உண்மையில் அவள் வார்த்தையை சுமப்பவளாக மாத்திரமே இருந்தாள். அவள் வார்த்தையல்ல; அவர் தான் வார்த்தை. அவர் உயிர்த்தெழுந்தார். 155. அவள், உயிரோடெழவில்லை என்பதைக் கவனிக்கவும். அவர் வார்த்தையாய் இருந்தபடியால், அவர் மரித்து, பின்பு உயிரோடெழுந்தார். மரியாள் மரித்து இப்பொழுதும் கல்லறையில் இருக்கிறாள், அவள் சபைகளைப் போல் சுமப்பவளாக மாத்திரம் இருந்தாள். 156. இதை கூறி முடிக்க விரும்புகிறேன். ஓ, பெந்தெகொஸ்தே பருந்துகளே, நீங்கள் வல்லூறுகளைப் போல் தாவிச் சென்று, மற்ற குழுக்களைப் போன்று உலக காரியங்களில் பங்கு கொள்கிறீர்கள். கூடுமானால் தெரிந்து கொள்ளப் பட்டவர்களையும் வஞ்சிக்கும் அளவிற்கு நீங்கள் தேவபக்தியின் வேஷத்தை தரித்து, அதன் பெலனை மறுதலிக்கிறவர்களாய் இருக்கின்றீர்கள். இது, லவோதிக்கேயா சபையின் காலத்தில் என்ன நேரிடுமென்று தேவனுடைய வார்த்தை முன்னறிவித்ததன் நிறைவேறுதலாயுள்ளது. அவர்கள் நிர்வாணி- களும், குருடரும், நிர்ப்பாக்கியமுள்ளவரும், பரிதபிக்கப்படத்தக்கவர்களும், தரித்திரருமாய் இருந்து அதை அறியாமலிருக்கின்றனர். அவர்கள் பெரியவர்கள், ஐசுவரியவான்கள், அவர்களுக்கு ஒரு குறைவுமில்லை என்று கூறுகின்றனர். தேவனுடைய வார்த்தையை சரிவரக் கைக்கொள்ளும் தங்கள் சகோதர கழுகை - தீர்க்கதரிசியை - போன்ற தன்மைகளைப் பெற்று இருக்கும் பருந்துகளாக இருப்பதை அவர்கள் நிராகரித்து, வல்லூறுகளாக மாறி, வேத சாஸ்திரமென்னும் செத்துப் போன முயல்களின் மாமிசத்தால் ஜனங்களை போஷித்து வருகின்றனர். உறக்கத்தினின்று எழும்புங்கள்! எடுத்துக் கொள்ளப்படுதல் அருகாமையில் இருக்கும் இந்நேரத்தில் அவர்கள் எவ்விதம் கழுகுடன் சுதந்தரவாளியாயிருக்க முடியும்? 157. ஓ, கிறிஸ்தவனே, ஓ, விசுவாசியே, இதுவரை ஒரு அரைகுறை விசுவாசியாக மாத்திரம் நீ இருந்து வந்திருந்தால், இக்கூட்டங்களில் இன்னும் சில நாட்கள் பங்கு கொள்ள உங்களை அழைக்கின்றேன். நீங்கள் அறிந்து கொள்ள வேண்டுமென்று தேவன் விரும்புவது எங்களிடம் உள்ளது என்று நம்புகிறேன். கூட்டத்தை முடிக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. இனி மேலும் நான் பிரசங்கம் செய்து கொண்டிருக்க முடியாது. சற்று நேரம் நாம் தலை வணங்குவோம். 158. நான் உபயோகிக்கும் தவறான இலக்கண மொழியை நீங்கள் கவனிக்க வேண்டாம். நான் கூறினதை மாத்திரம் சற்று சிந்தனை செய்து பாருங்கள். நீங்கள் உண்மையாகவே ஆவல் கொண்டிருந்தால், நான் இப்பொழுது கூறினது நீங்கள் புரிந்து கொள்ளும் அளவிற்கு தெளிவாயுள்ளது. இந்த அனுபவத்தைப் பெறாதவர்களாய் இங்கு இருக்கின்றீர்களா? “நான் ஆவியில் நடனமாடிய் இருக்கிறேன்” என்று நீங்கள் கூறலாம். பருந்துகளும், காகங்களும், வல்லூறுகளும் அவ்வாறே நடனமாடுகின்றன. நான் அதைக் குறித்து இங்கு பேசவில்லை . நீங்கள் எதை உண்கிறீர்கள்-? உங்கள் அன்றாட ஆகாரத்தை எங்கிருந்து பெற்றுக் கொள்கின்றீர்கள்? தேவனுடைய வார்த்தையிலிருந்தா-? அல்லது அனேக ஆண்டுகளுக்கு முன்பு செத்துப் போன மிருகத்தின் மாமிசத்தையா-? உங்களுக்குள்ள அனுபவம் அனேக ஆண்டுகளுக்கு முன்பு நீங்கள் பெற்றதா-?, அல்லது இன்றிரவு அது புதிய, பழமையற்ற அனுபவமாய் உள்ளதா-? இப்பொழுது புதிதாக வானத்திலிருந்து விழும் மன்னாவினால் உங்கள் ஆத்துமாக்களைப் போஷித்து, நாளை மேலான காரியங்களை எதிர் நோக்குபவர்களாக நீங்கள் இருக்கின்றீர்களா-? நீங்கள் அவ்விதம் இராமலிருந்தால், உங்கள் இருதயங்களையும் தலைகளை-யும் வணங்கி, உங்கள் கைகளை - என்னிடமல்ல - தேவனிடத்தில் உயர்த்தி, "ஆண்டவரே, தேவனுடைய வார்த்தையை மாத்திரம் உண்ணத்தக்கதாக, என் ஆவியையும் ஆத்துமாவையும் சீர்படுத்தும்” என்று கேளுங்கள். உங்கள் கரங்களை உயர்த்தி அவ்விதம் கேட்பீர்களா-? கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக! 159. இன்றிரவு இங்கு கூடி வந்துள்ளவர்கள் எத்தனை பேர் என்று எனக்குக் கணக்கிடத் தெரியாது. ஆனால் வந்துள்ளவர்களில் குறைந்தது மூன்றிலொரு பங்கு கரங்களையுயர்த்தி, அவர்கள் ஆத்துமாக்கள் சீர்பட வேண்டுமென்று விரும்புவதை நான் காண்கிறேன். நாம் இப்பொழுது தலை வணங்கி ஜெபம் செய்யும் போது அவர்களை நினைவுகூறுவோம். 160. அருமை தேவனே, உமது வார்த்தையை எடுத்துரைப்பதற்கு மாத்திரமே நான் பொறுப்பாளி. இந்த சிறு உதாரணங்களாலும், முன்னடையாளங்களாலும் ஒரு சாரார் மற்றொரு சாராருடன் சுதந்தரவாளியாயிருப்பதில்லை என்பதை ஜனங்களால் காண முடிகின்றது. கடைசி நாட்களில் ஆகாயத்தில் எடுத்துக் கொள்ளப்படவிருக்கும் மக்கள் இருப்பார்கள் என்பதை நாங்கள் அறிந்து இருக்கிறோம். இயேசு வரும் போது, அப்படிப்பட்டவர்கள் சிலர் இங்கு இருப்பார்கள். அவர் வருகையை நாங்கள் இன்றிரவு கூட எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். 161. 30 அல்லது 33 ஆண்டுகட்கு முன்னர் நான் இங்கு முழங்காற்படியிட்டு ஜெபித்ததை நினைவுகூறுகிறேன். அப்பொழுது இரவு 9.30 அல்லது 10-மணி இருக்கும், இரட்சிக்கப்பட்டிராத என் தகப்பனுக்காக நான் அப்பொழுது ஜெபம் செய்தேன். ஆண்டவரே, இன்றிரவு அநேக தகப்பன்மார், தாய்மார், சகோதரர், சகோதரிகளுக்காக ஜெபத்தை ஏறெடுக்கிறேன். எங்கள் மேல் இரக்கமாயிருக்க மாட்டீரோ? என் தகப்பனார் இவ்வுலகை விட்டு சென்று விட்டார்; அவரால் இப்பொழுது ஒன்றும் செய்ய முடியாது. நாங்கள் எல்லோரும் விரைவில் செல்ல வேண்டியவர்களாய் இருக்கிறோம், நானும் அவ்வழியே செல்ல வேண்டும். ஒவ்வொரு மனிதனும், ஸ்திரீயும், பையனும், பெண்ணும் அந்த வழியாக செல்ல வேண்டியவர்களாய் இருக்கின்றனர். தேவனுடைய வார்த்தையைக் குறித்து என்ன செய்தோம் என்று ஒரு நாள் நாங்கள் கணக்கு ஒப்புவிக்க வேண்டும். 162. தாவீதின் முகத்தில் துப்பினவன் அந்நாளில் எத்தகைய மோசமான நிலையில் இருப்பான்-! அவ்வாறே வார்த்தையாகிய இயேசுவின் முகத்தில் துப்பினவர்களும், அவர் மறுபடியும் வரும் நாளில் எவ்வளவு மோசமான நிலையில் இருப்பார்கள்-! சாதாரண இயற்கையைக் கொண்டு... பெரிய பெரிய கிரேக்க வார்த்தைகளின் மூலமாயல்ல - தேவனே சிருஷ்டி கர்த்தர் என்றும், வார்த்தையை சுமந்தவர்கள் யார் யார் என்றும் அறிந்து கொண்ட பின்பும், அதை ஏற்க மறுத்து இவ்விடம் விட்டு செல்பவர், அந்நாளில் எவ்வளவு மோசமான நிலையில் இருப்பார்கள்-! நாங்கள் எந்த காலத்தில் வாழ்ந்து வருகிறோம் என்பதை அறிந்திருக்கிறோம். அறுப்பு காலம் வந்து விட்டது, அன்புள்ள தேவனே, உலகின் அறிவீனத்திற்காக இதை நாங்கள் புறக்கணிக்க வேண்டாம். அவரை இன்றிரவு முழு இருதயத்துடன் ஏற்றுக்கொள்ள கிருபை அருளும். 163. ஆண்டவரே, நல்லாவியை; ஜீவனுள்ள ஆவியை என்னிலே சிருஷ்டித்து, உம்முடைய வார்த்தை அனைத்தையும் விசுவாசித்து, நேற்றும் இன்றும் என்றும் மாறாத வார்த்தையாகிய இயேசுவை ஏற்றுக் கொள்ள அருள் புரியும். இக்காலத்திற்கென அளிக்கப்பட்டுள்ள வேத வசனங்களை விசுவாசிக்கும்படி செய்யும். இயேசுவின் நாமத்தில் கேட்கிறேன், ஆமென். 164. நீங்கள் சேர்ந்து கொள்ள எங்களிடம் சபை கிடையாது. ஆனால் நீங்கள் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ள கூடாரத்தில் ஒரு குளம் உள்ளது. "விசுவாசித்தவர்கள் ஞானஸ்நானம் பெற்றார்கள்” என்று வேதம் உரைக்கிறது. ஒருக்கால் நீங்கள் கிறிஸ்தவ முறைப்படி ஞானஸ்நானம் பெறாமல் இருக்கலாம். தெளித்தல், ஊற்றல், பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தில் ஞானஸ்நானம் பெறுதல் இவையனைத்தும் உண்மையான ஞான ஸ்நானமன்று. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கொடுக்கப்படும் ஞான ஸ்நானமே உண்மையான ஞானஸ்நானமாகும். கி.பி.303-ல் கத்தோலிக்க சபை மூன்று தெய்வங்களை நுழைத்து, திரித்துவப் பட்டங்களை உபயோகித்து ஞானஸ்நானம் கொடுக்கத் தொடங்கினது. அது வரைக்கும் சபையானது இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் மாத்திரமே ஞானஸ்நானம் கொடுத்து வந்தது. 165. நீங்கள் இதுவரை இம்முறையில் ஞானஸ்நானம் பெற்றிராவிடில், நாளை காலை 10 மணிக்கு வாருங்கள். ஞானஸ்நான உடைகள் ஆயத்தமாயிருக்கும். நாங்கள் உங்களுக்காக காத்திருப்போம். நீங்கள் எங்களுடனல்ல, இயேசு கிறிஸ்துவினிடம் சேர்ந்து கொள்ள மாட்டீர்களா? உங்களை விசாரிக்க எங்களிடம் சபை கிடையாது. நீங்கள் எந்த சபைக்கு வேண்டுமானாலும் செல்லுங்கள். 166. ஆனால் தயவு செய்து வார்த்தையை விசுவாசியுங்கள். எவ்விதத்தில் ஆகிலும் நாங்கள் உங்களுக்கு உதவி செய்ய வேண்டுமென்று நீங்கள் விரும்பினால், அதற்காகவே நாங்கள் இங்கு இருக்கிறோம். 167. ஜெபம் விரும்பும் வியாதியஸ்தர் இங்குள்ளனர் என்று நானறிவேன். எனக்காக ஒன்று செய்ய வேண்டுகிறேன். நீங்கள் ஒவ்வொருவரும் வேறு ஓருவரின் அருகாமையில் அமர்ந்திருக்கின்றீர்கள். உங்கள் அருகிலிருப்பவர் மேல் கரங்களை வையுங்கள். நீங்கள் கழுகின் மேல் கை வைக்க வகை உண்டு. அந்த கழுகு, வல்லூறுவின் ஆகாரத்தை எங்காவது தின்று கொண்டு இருக்கலாம். அந்த ஆகாரத்தை இப்பொழுது அது வெறுத்து, அதனின்று வெளி வர விருப்பலாம், கழுகுகள் எப்படிப்பட்ட ஆகாரத்தை தின்னும், அதாவது வார்த்தையை; - என்பதை அவர்கள் இன்றிரவு இங்கு அமர்ந்திருக்கும் போது அறிந்து கொண்டிருக்கலாம். அவர்கள் மத்தியில் ஜீவனுள்ள கிறிஸ்து; நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராக இருந்து, தம்மை ஜீவிக்கிறவராக வெளிப்படுத்தி வருகிறார். அவர்கள் பதருடன் சுதந்தரவாளியாய் இருக்க விரும்பவில்லை. பதரும் வைக்கோலும் சுட்டெரிக்கப்பட வேண்டும். கோதுமை மணியைப் புடைத்து, பதரினின்று பிரிக்க அறுவடை செய்யும் நேரம் வந்துள்ளது. நீங்கள் கோதுமை மணிகளாக இருக்க விரும்புகின்றீர்களா? 168. வியாதியஸ்தர் இங்கு வந்திருக்கின்றனர். கழுகே, அவர்களுக்காக ஜெபம் செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன். நான் உங்களுக்காக இங்கிருந்து ஜெபிக்கும் நேரத்தில், உங்கள் சகோதர, சகோதரி கழுகுகளுக்காக நீங்கள் ஜெபம் செய்யுங்கள். தேவ ஆவியானவர் உங்கள் மேல் இறங்குவாராக-! 169. நான் உங்களுக்கு கழுகின் ஆகாரத்தை - தேவனுடைய வாக்குத்தத்தத்தை அளிக்கிறேன் என்பது நினைவிருக்கட்டும். தமது தீர்க்கதரிசிகளை அவர் கழுகுகள் என்று அழைக்கிறார், அவர் “யேகோவா கழுகு”. உங்கள் கரங்களை நீங்கள் மற்றவர் மீது வைத்திருக்கும் போது அவர்களுக்காக ஜெபம் செய்யுங்கள். 170. எங்கள் பரம பிதாவே, நீர் சபைக்கு அளித்த உமது கடைசி கட்டளை: "நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்” என்பதாகும். அது ஒரு கட்டளை. "விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்-படுவான்; விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படு-வான். விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள்; நவமான பாஷை-களைப் பேசுவார்கள்: சர்ப்பங்களை எடுப்பார்கள்; சாவுக்கேதுவான யாதொன்றைக் குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது; வியாதியாஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள்.” (மாற் 16: 15 - 18). ஓ, யேகோவா கழுகே, இன்றிரவு உமது குஞ்சுகளுக்கு உமது வார்த்தையாகிய ஆகாரத்தை ஊட்டுவீராக! அவர்களுக்கு அந்த ஆகாரம் அவசியமாயுள்ளது, ஆகாரம் என்றால் என்னவென்பதை அவர்கள் அறிந்துகொள்ள வேண்டியவரா- யிருக்கின்றனர். "கர்த்தர் உரைக்கிறதாவது” என்றால் என்னவென்பதையும் அவர்கள் அறிந்து கொள்ளவேண்டும். 171. ஒருவர் மேல் ஒருவர் அவர்கள் கரங்களை வைத்தால் சொஸ்தமாவார்கள் என்று நீர் வாக்களித்திருக்கிறீர். ஓ, தேவனாகிய கர்த்தாவே, நாங்கள் தேவனுடைய வார்த்தையாகிய கழுகின் ஆகாரத்தைப் புசிக்கும் இந்நேரத்தில், எல்லா சந்தேகங்களையும் வல்லூறுகளின் கருத்துக்களையும் எங்களை விட்டகற்றும். 172. ஜனங்களுக்குள் இருக்கும் எல்லா அசுத்த ஆவிகளும் சந்தேகத்தின் ஆவியும், பயத்தின் ஆவியும், ஸ்தாபனங்களின் காரியங்களும், எல்லா வியாதிகளும் வெளியே வரும்படி இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கட்டளை இடுகிறேன். இன்று முதல் அவர்கள் கழுகின் ஆகாரத்தையே புசிக்கட்டும். இந்த வாரம் பூராவும் நடக்கவிருக்கும் கூட்டங்களில் அந்த ஆகாரத்தை நீர் அனுப்பி, நீர் வாக்களித்துள்ள பிரகாரம் முத்திரைகளை உடைத்து, உலகத் தோற்ற முதல் மறைக்கப்பட்டுள்ள தேவ இரகசியங்களை எங்களுக்கு வெளிப்படுத்தித் தருவீர் என்று விசுவாசிக்கின்றோம். பிதாவே, இவர்கள் உம்முடையவர்கள். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென்.